புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிராமங்களில் குவிந்துள்ள திறமையாளர்களை வெளிக் கொண்டு வர வேண்டும்.. பிடி. உஷா

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: விளையாட்டில் அதிக திறமையான வீரர்கள் கிராமபுரத்தில் தான் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு என்றே தனி விளையாட்டு அகடமியை உருவாக்கி அவர்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால் இந்தியாவிற்கு பல திறமையான விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாழையீடு பகுதியில் உள்ள மெளன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இவ்விழாவில் இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

Rural players need separate sports academy - P.t.Usha

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்கள் காலத்தில் விளையாட்டில் போட்டிகளில் கலந்து கொள்ள நினைப்பவர்களுக்கு போதிய வசதிகள் கிடையாது. ஆனால் தற்போது மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு துறைக்கு என்று நிதி உதவிகளையும் பல்வேறு சலுகைகளையும் அறிவித்து விளையாட்டு துறையை ஊக்கப்படுத்தி வருகிறது.

ஒரு காலத்தில் விளையாட்டு துறைக்கு பெண்கள் வருவதே அதிசயமாக பார்க்கும் நிலை இருந்த காலம் போய் தற்போது விளையாட்டு துறையில் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் 14 வயதுக்கு உட்பட்ட பல திறமையான விளையாட்டு வீரர்கள் கிராம புரங்களில் தான் அதிகம் உள்ளனர்.

அவர்களை மத்திய மாநில விளையாட்டுஅகடமில் உள்ள அதிகாரிகள் கண்டறிந்து அவர்களுக்கு என்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம புரங்களில் ஒரு விளையாட்டு அகடமியை ஏற்படுத்த வேண்டும்.

அதில் விளையாட்டு துறையில் கண்டறிந்த திறமையான வீரர்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டுக்கு தேவையான உபகரண்களை இலவசமாக கொடுக்க வேண்டும். நல்ல பயிற்சி கொடுத்தால் பல்வேறு விளையாட்டு துறைகளில் பல திறமையான விளையாட்டு வீரர்களை இந்தியாவிற்காக உருவாக்க முடியும்.

மேலும் பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்போடு சேர்த்து விளையாட்டிலும் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அதேப்போல் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தங்களுடைய குழந்தைகளை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளுமாறு ஊக்குவிக்க வேண்டும் என்றார்

English summary
Currently the field more women enthusiastically participated to bring happiness. the age of 14 and including many talented athletes village just too much for their federal state the authorities to find and India in all states of the Rural a game in the Academy created a boost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X