புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கும், சுயேச்சை அமமுகவுக்கும் வாக்களிக்காதீர்- திருநாவுக்கரசர்

Google Oneindia Tamil News

கீரனூர்: அடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கும் சுயேச்சை அமமுகவுக்கும் வாக்களிப்பதில் எந்த பயனும் இல்லை என திருநாவுக்கரசர் பிரசாரம் செய்தார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக எஸ் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை கீரனூரில் பிரசாரம் செய்தார்.

இன்றுடன் பிரசாரம் ஓய்வடையவுள்ள நிலையில் அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

கலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்!

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அப்போது அவர் பேசுகையில் இந்த தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. மாறாக அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் நான் பணியாற்றியுள்ளேன்.

வளர்க்கப்பட்டவன்

வளர்க்கப்பட்டவன்

அந்த வகையில் கேட்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க விருப்பமுள்ளவர்கள் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள். நீங்கள் விரும்பும் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவன் நான்.

யார் பக்கம் குண்டர்கள்? யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி!யார் பக்கம் குண்டர்கள்? யார் பக்கம் தொண்டர்கள்.. ராஜேந்திர பாலாஜி பலே பேட்டி!

கை சின்னத்துக்கு

கை சின்னத்துக்கு

அடையாளமே தெரியாத விஜயகாந்த் கட்சிக்கும் சுயேச்சை போல் நிரந்தர சின்னமே இல்லாத அமமுக வேட்பாளருக்கும் வாக்களிப்பது வேஸ்ட், எந்த பயனும் இல்லை. எனவே கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

அணை கட்டுவதை நிறுத்தினேன்

அணை கட்டுவதை நிறுத்தினேன்

மேகதாது அணை குறித்து ராகுல் காந்திக்கு அந்த மாநில நிர்வாகிகள் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் அவர் பேசியிருப்பார். தமிழகத்தின் நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறி அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவேன். நேரம் குறைவாக இருக்கிறது. அதனால் இன்னும் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லவில்லை. நீங்கள் போட்ட வாக்குகளால் நான் வெற்றி பெற்று நன்றி கூற இங்கு வரும் போது கோழிக் கறி விருந்து சாப்பிடுவோம் என்றார்.

English summary
Congress Candidate S. Thirunavukkarasar asks voters to cast their vote in hand symbol if they wish to vote for Jayalalitha and MGR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X