புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜி.எஸ்.டி கூட்டத்தை தவிர்த்த பி.டி.ஆர்.. கடும் கண்டனம் தெரிவித்த ஜி.கே.வாசன்.. பரபரப்பு பேட்டி!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ஜி.எஸ்.டி கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரித்துள்ளார்.

செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

3 ரன்னில் நடையை கட்டிய தோனி.. மும்பையை சுருட்டிய சிஎஸ்கே.. கலந்துகட்டி கலக்கும் மீம்ஸ் 3 ரன்னில் நடையை கட்டிய தோனி.. மும்பையை சுருட்டிய சிஎஸ்கே.. கலந்துகட்டி கலக்கும் மீம்ஸ்

அ.தி.மு.க கூட்டணியை பொறுத்தவரை பா.ம.க கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது.. ஆனால் தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க கூட்டணியில் தொடர்கிறது. த.மா.கா போட்டியிடும் இடங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஜி.கே.வாசன் பேட்டி

ஜி.கே.வாசன் பேட்டி

இது தொடர்பாக புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேட்டியளித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:- ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்தல் ஆணையம் முறையாக கோட்பாடுகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்பது மாவட்டங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் கலந்து பேசி தேர்தலில் நிற்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா,.ம.க அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகியது அது அவர்களின் தனிப்பட்ட உரிமையாகும்.

நிதியமைச்சருக்கு கண்டனம்

நிதியமைச்சருக்கு கண்டனம்

ஜி.எஸ்.டி கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு இருக்க வேண்டும். அவருடைய பேச்சுக்கள் சர்ச்சையாகி வருகிறது. மக்கள் போற்றும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடு மற்றும் பேச்சுக்கள் இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஆனால் தற்போது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறது

 தி.மு.க

தி.மு.க

கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அனைத்து நகை கடன்களும் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க கூறியது. தற்போது ஐந்து பவுனுக்கு மேல் நகைக்கடன் வைத்துள்ளவர்களிடம் உடனடியாக கடன் தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று கூறுவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது

முழு கவனம்

முழு கவனம்

தமிழகத்தில் யூரியா பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதற்கு அதிகாரிகளின் முழு கவனமும் இருக்க வேண்டும். மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. அரசின் செயல்பாட்டை மக்களை கூர்ந்து கவனித்து வருகின்றனர். இவ்வாறு ஜி.கே..வாசன் தெரிவித்தார்.

English summary
Tamil maanila congress leader GK Vasan has said that Finance Minister Palanivel Thiagarajan should be present at the GST meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X