புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லா சாப்பிட்டே 10 நாளுக்கு மேல ஆகுது.. கொதித்து கூறும் டெல்டாவாசிகள்

தமிழக அரசை கண்டித்து மாவட்டங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சரியான உணவு பொருட்கள் இல்லாமல் அவதிப்படும் டெல்டா விவசாயிகள்- வீடியோ

    புதுக்கோட்டை: "நல்லா சாப்பிட்டே 10 நாளுக்கு மேல ஆகுது" என்று புயல் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

    கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு 14 நாட்களாகியும் இன்னும் நிலைமை சீராகவில்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் கோபமாக உள்ளனர்.

    புயல் பாதிப்பு காரணமாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் மின் ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்த்துதான் வருகிறார்கள்.

     அரசு பஸ் சிறைபிடிப்பு

    அரசு பஸ் சிறைபிடிப்பு

    எனினும் சில பகுதிகளுக்கு கரண்ட்டே இதுவரை வராமல் உள்ளது. வடமதுரை பகுதியில் நேற்றுகூட கரண்ட் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுக்கிரன்குண்டு என்ற கிராமம் உள்ளது. 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு பெரும்பாலும் எல்லாருமே கூலி வேலை பார்ப்பவர்கள்தான்.

     சுகாதாரக்கேடு

    சுகாதாரக்கேடு

    இவர்களின் புயலில் குடிசைகள் பறந்து போய், இப்போது ஊரெல்லாம் கொசுக்கள் பறந்தபடியே இருக்கின்றன. சுகாதார சீர்கேடு காரணமாக எல்லாருக்கும் காய்ச்சல் வேறு. மாற்று துணி கூட உடுத்திக்க இல்லை. நல்லா சாப்பிட்டே 10 நாளுக்கு மேல ஆகுது என்கிறார்கள்.

     நிவாரணம்

    நிவாரணம்

    ஆனால் இதைவிட பெரும்பாலான இடங்களில் மக்கள் ஒன்றுசேர்ந்து சொல்லும் குறை என்னவென்றால், புயல் தொடர்பான உரிய கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுதான். ஏனென்றால், கணக்கெடுப்பு சரியாக இருந்தால் உரிய நிவாரணம் கைக்கு வந்து சேரும்.

     உணவு பொருட்கள்

    உணவு பொருட்கள்

    இதனால்தான் மக்கள் இந்த கோரிக்கையை பலமாக முன் வைத்துள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டி போட்டு மறியலும் செய்து வருகிறார்கள். சில இடங்களில் லாரிகளில் வரும் உணவு பொருட்களும் நேரத்துக்கு வந்து சேரவில்லை என்றும் சொல்லி வருத்தப்படுகிறார்கள்.

    English summary
    We do not have good food more than 10 days: Delta Victims
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X