புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்.. திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவது ஏன்.. கார்த்தி சிதம்பரம் பேட்டி

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: திமுக கூட்டணி பலமாக உள்ளது என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுபடி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்கான தான் திமுக உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாட உள்ளதாகவும் புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

டெல்லி திகார் சிறையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருக்கு ப சிதம்பரத்துக்கு அருகே திருச்சி முதல் சிவகங்கை வரை வரவேற்பு அளிக்கப்பட்டது.

why dmk going to supreme court over local body elections: explained karti chidambaram

புதுக்கோட்டை மாவட்டம் கட்டியாவயல் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பா சிதம்பரத்தை வரவேற்று அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்தனர்

இதில் கலந்து கொண்ட ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில் , 'உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறதா என்பதை உறுதி படுத்துவதற்காக தான் திமுக மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளது தெரிவித்தார்.

தேர்தலை கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று கூறிய கார்த்தி சிதம்பரம், தங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறிய கார்த்தி சிதம்பரம், சட்டத்தின் முன்பு நிறுத்தி அவர்களை நிறுத்தி தண்டனை பெற்றிருக்க வேண்டும் பெற்று தந்திருக்க வேண்டும் என்றார்.

அவர்கள்தான் குற்றவாளியா என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் ஒவ்வொரு வீட்டிலும் பெண்களை மதிக்க ஆண்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்றும் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது என்றும் காரத்தி சிதம்பரம் பேட்டியின் போது தெரிவித்தார்.

English summary
local body elections should conduct as per supreme court order , that's why dmk going to supreme court: says karti chidambaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X