புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்!

Google Oneindia Tamil News

புனே: தடுப்பூசி சோதனைகள் சிறப்பாகச் சென்று முடிவுகள் சாதகமாக இருந்தால், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிட் -19 தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கும் என்று அதன் சிஇஒ அடார் பூனவல்லா கூறினார். மேலும் எங்கள் கோவிட் தடுப்பூசிகளில் 50% இந்தியாவுக்கானதாக இருக்கும், மக்கள் அவற்றை வாங்க வேண்டியதில்லை, அரசாங்கங்களே அதை செலுத்தும் என்றும் கூறினார்.

Recommended Video

    50 சதவிகித vaccine இந்தியாவுக்கு தான்... Serum CEO சூப்பர் அறிவிப்பு

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு வரும் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் மனித சோதனைத் தரவை லான்செட் இதழில் வெளியிட்ட மறுநாளே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா தனது நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்றார்.

    எனினும் இந்த தடுப்பூசி பெரும்பாலும் அரசாங்கங்களால் வாங்கப்படும் என்றும், நோய்த்தடுப்பு திட்டங்கள் மூலம் மக்கள் அவற்றை இலவசமாகப் பெறுவார்கள் என்றும் பூனவல்லா கூறினார்.

    கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000.. எப்போது கிடைக்கும்.. சீரம் நிறுவன சிஇஒ பேட்டி கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000.. எப்போது கிடைக்கும்.. சீரம் நிறுவன சிஇஒ பேட்டி

    இந்தியாவில் தயாரிப்போம்

    இந்தியாவில் தயாரிப்போம்

    சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். பிரபல ஆங்கில ஊடகத்திற்கு சீரம் நிறுவன சிஇஒ அடார் பூனவல்லா அளித்த பிரத்யேக பேட்டியில் "தடுப்பூசி சோதனைகள் சிறப்பாக நடந்து முடிவுகள் சாதகமாக இருந்தால், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கூட்டாளியாக இணைந்து தயாரிக்கும். இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியின் 3 ஆம் கட்ட மனித சோதனைகளை நடத்துவதற்கான ஒழுங்குமுறை அனுமதி கேட்டு அரசை அணுகி உள்ளோம். எனவே முடிவுகள் சாதகமாக இருந்தால் தடுப்பூசி வெகுஜன அளவில் தயாரிக்கப்படும்..

    சமமாக தடுப்பூசி

    சமமாக தடுப்பூசி

    எங்கள் (தடுப்பூசி) உற்பத்தியில் பாதியை ஒவ்வொரு மாதமும் இந்தியாவுக்கும், மற்ற பாதியை மற்ற நாடுகளுக்கும் விகித சார்பு அடிப்படையில் வழங்க விரும்புகிறோம் என்று நாங்கள் கூறியுள்ளோம். அரசாங்கம் ஆதரவளித்து வருகிறது. இது ஒரு உலகளாவிய நெருக்கடி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் உலகெங்கிலும் உள்ள மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதையும் சமமாக தடுப்பூசி போடுவது முக்கியம்,

    அடுத்த ஆண்டு பயன்பாடு

    அடுத்த ஆண்டு பயன்பாடு

    சோதனைகள் மற்றும் முடிவுகள் திட்டமிட்டபடி நடந்தால், நவம்பர்-டிசம்பர் மாதத்திற்குள் சில மில்லியன் டோஸ் தடுப்பூசிகளையும், 2021 முதல் காலாண்டில் சுமார் 300-400 மில்லியன் டோஸையும் வெகுஜன பயன்பாட்டிற்கு எங்கள் நிறுவனத்தால் தயாரிக்க முடியும்.

    முதியவர்கள், மருத்துவர்கள்

    முதியவர்கள், மருத்துவர்கள்

    முதல் தொகுதியில் யாருக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று கேட்கிறீர்கள், தடுப்பூசி யாருக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று முடிவு செய்வதை அரசாங்கத்திடம் விட்டுவிட்டோம். தடுப்பூசியை விநியோகிப்பதற்கான நெறிமுறை என்னவென்றால், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்சி குறைந்தவர்கள் (மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள்) நோயை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள் பெறுவார்கள். ஆரோக்கியமானவர்கள் பின்னர் தடுப்பூசியைப் பெறலாம் .

    அரசுகள் இலவசமாக தரும்

    அரசுகள் இலவசமாக தரும்

    இந்த தடுப்பூசியின் விலைக் கூறு குறித்து கேட்கிறீர்கள். தடுப்பூசியின் ஒவ்வொரு டோஸுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது குறித்து கருத்துத் தெரிவிப்பது கடினம். நிச்சயமாக இது மிகவும் மலிவு விலையில் வழங்கப்படும். இன்று, ஒரு கோவிட் -19 சோதனைக்கு ரூ .2,500 செலவாகிறது.. ரெம்டீசீவர் போன்ற மருந்துகள் பல்லாயிரக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கில் பணம் செலவாகின்றன. ஆனால் எங்கள் மருந்தின் விலையை சுமார் 1,000 ரூபாய்க்குள் வைக்க திட்டமிட்டுள்ளோம் தடுப்பூசிகள் பெரும்பாலும் அரசாங்கங்களால் வாங்கப்பட்டு பின்னர் நோய்த்தடுப்பு திட்டங்கள் மூலம் இலவசமாக விநியோகிக்கப்படும் என்பதால் எந்தவொரு தனிநபரும் அதற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

    3 டாலரில் தருவோம்

    3 டாலரில் தருவோம்

    ஆப்பிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை, எங்களது நிறுவனம் தடுப்பூசிக்கு ஒரு டோஸ் மருந்தை 2-3 டாலர் வழங்க உறுதிபூண்டுள்ளது. மிகவும் மலிவு விலையில் மருந்து கொடுக்க வேண்டும் என்கிற எங்களின் கொள்கைக்கு ஏற்ப இது அமையும். தொற்றுநோயான நிலையில் நாங்கள் லாபம் ஈட்ட விரும்பவில்லை. தொற்றுநோய் முடிந்ததும், நாங்கள் அதிக வணிக விலை மற்றும் தடுப்பூசியைப் பார்க்கலாம். மற்ற மருந்துகளைப் போலவே தனியார் சந்தையிலும் கிடைக்கக்கூடும்" என்றார்.

    English summary
    50% of our Covid vaccines will be for India, people won't have to buy them, says Adra Poonawalla, CEO of Serum Institute , says Adra Poonawalla, CEO of Serum Institute
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X