புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஜெய் ஸ்ரீ ராம்'.. கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம்.. சசிதரூர்

Google Oneindia Tamil News

புனே: கடவுள் ராமர் பெயரில் கொலைகள் நடப்பது அவருக்கே அவமானம் என்றும் இந்து தர்மத்தை அவமதிக்கும் செயல் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

புனேவில் ஞாயிற்றுகிழமை (இன்று) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கலந்து கொண்டார்.

 an insult to Lord Ram that people are being killed using his name : Shashi Tharoor

அப்போது அவர் பேசுகையில், " கடந்த 6 ஆண்டுகளாக நாம் என்ன பார்த்துக் கொண்டி வருகிறோம்? இந்த கொலைகள் புனேவில் மொஹ்சின் ஷேக் கொல்லப்பட்டதில் இருந்து தொடங்கியது. மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி முகமது அக்லக் கொலை செய்யப்பட்டார். ஆனால், அது மாட்டுக்கறி அல்ல என்று பின்னர் சொன்னார்கள். ஒருவேளை அது மாட்டுக்கறியாகவே இருந்தாலும் ஒருவரை கொல்லும் உரிமையை கொடுத்தது யார்?, இது தான் நம் பாரதமா? இந்து தர்மம் சொல்வது இதுதானா? நானும் ஒரு இந்து தான் ஆனால் இந்த வகையானவன் அல்ல.

திமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்?.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!திமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்?.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!

மக்களை கொல்லும் போது அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்லுமாறு கேட்கிறார்கள். இப்படி செய்வது இந்து தர்மத்தை அவமதிப்பதாகும். ராமரின் பெயரால் கொலைகள் நடப்பது கடவுன் ராமருக்கு அவமானம் ஆகும்"

பால் பண்ணைக்காக பசுக்களை லாரியில் ஏற்றிச் செல்ல பெலு கான் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரும் அடித்துக் கொல்லப்பட்டார். ஒரு தேர்தல் வெற்றி எதனையும் செய்வதற்கும், யாரையும் கொல்வதற்கும் அதிகாரத்தை கொடுக்கிறதா?" இவ்வாறு கூறினார்.

English summary
an insult to Lord Ram that people are being killed using his name, It is an insult to Hindu Dharma: Shashi Tharoor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X