புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1000.. எப்போது கிடைக்கும்.. சீரம் நிறுவன சிஇஒ பேட்டி

Google Oneindia Tamil News

புனே: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய புனோவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இந்த மருந்தின் விலை எப்படி இருக்கும், மனிதர்களுக்கு கொடுத்து இந்தியாவில் எப்போது சோதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா பதில் அளித்துள்ளார்.

Recommended Video

    50 சதவிகித vaccine இந்தியாவுக்கு தான்... Serum CEO சூப்பர் அறிவிப்பு

    பிரபல ஆங்கில நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு அவர் மின்னஞ்சல் வாயிலாக பதில் அளித்துள்ளார். அவர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பெருமளவில் உற்பத்தி செய்வது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கும்.

    அதே நேரத்தில் இந்தியாவில் மனித சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும். தடுப்பூசி மலிவு விலையில் இருக்கும் என்றும் அதன் விலை ஒரு டோஸுக்கு ரூ .1,000 க்கு கீழ் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    கொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்! கொரோனா தடுப்பூசி 50% இந்தியாவுக்கு தான்.. காசு கொடுத்தும் வாங்க வேண்டியதில்லை.. சீரம் சிஇஒ சூப்பர்!

    ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

    ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

    கேள்வி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும் தடுப்பூசியின் நிலை என்ன?

    பதில்: தற்போது, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ள அஸ்ட்ராஜெனெகா ஆக்ஸ்போர்டு தடுப்பூசியில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது தவிர, வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்க உள்ளோம்.

    உற்பத்தி எப்போது

    உற்பத்தி எப்போது


    கேள்வி: இந்த தடுப்பூசி எப்போது பொதுமக்களுக்கு கிடைக்கும்? பொதுமக்களுக்கு தேவையாள அளவு உற்பத்திக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? மேலும், உங்கள் நிறுவனங்களின் திறனைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்.

    பதில்: கொரோனா (கோவிட் 19) தடுப்பூசியை தயாரிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதி எங்களிடம் உள்ளது. ஆபத்தின் நிலையை பொறுத்து சில மில்லியன் அளவுகளை உற்பத்தி செய்யத் தொடங்குவோம். சோதனைகளின் வெற்றியின் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசியை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கிறோம். அஸ்ட்ராசெனெகாவுடனான எங்கள் ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்கும் உலகின் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கும் ஒரு பில்லியன் டோஸ் தயாரிக்கத் தொடங்குவோம். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் 2021), அது மக்களை அடையத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்.

    100 சதவீதம் உத்தரவாதம்

    100 சதவீதம் உத்தரவாதம்

    கேள்வி: மற்ற நிறுவனங்களும் கோவிட் -19 தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன. உங்கள் தடுப்பூசி மற்றவர்களுடன் ஒப்பிடும்போது என்ன தனித்துவம் இருக்கும்? எத்தனை டோஸ் எடுக்க வேண்டும் மற்றும் நிர்வாக செயல்முறையையும் விளக்குங்கள். COVID-19 இலிருந்து 100 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உத்தரவாதம் அளிக்க முடியுமா?

    பதில்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி ஒரு வைரஸ் திசையன் வகையாகும். இது ஒரு நோய்க்கிருமியின் மரபணுப் பொருளை உயிரணுக்களுக்கு வழங்க பாதிப்பில்லாத வைரஸைப் பயன்படுத்துகிறது. அதாவது நோய் எதிர்ப்பு மண்டலங்களை ஏமாற்றி பாதிப்பை தராத மட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் உடலில் செலுத்தப்படும். இதை உயிரணுக்கள் அழித்துவிடும். பின்னர் இது அசல் நோய்க்கிருமிக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்ளும். இது ஒரு சிம்பன்சி அடினோவைரஸ் (ஒரு பொதுவான குளிர் வைரஸ்) கில்பர்ட் மற்றும் அவரது குழுவினரால் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கட்டணம் எவ்வளவு

    கட்டணம் எவ்வளவு

    கேள்வி: இந்த தடுப்பூசியின் முதன்மை மற்றும் சராசரி அல்லது தோராயமான செலவு என்ன?

    பதில்: தடுப்பூசியின் விலை குறித்து கருத்து தெரிவிப்பது மிக விரைவில். இருப்பினும், அதை ரூ .1,000 க்கு கீழ் தான் வைத்திருப்போம். , எங்கள் நோக்கம் ஒரு திறமையான மற்றும் மலிவு தடுப்பூசியை வழங்குது ஆகும். இது கட்டணமின்றி அரசாங்கங்களால் வாங்கப்பட்டு விநியோகிக்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    கேள்வி: தடுப்பூசிக்காக உங்களை அணுகிய நாடுகள் யாவை, உங்கள் திட்டங்கள் என்ன?

    பதில்: அஸ்ட்ராஜெனெகாவுடனான எங்கள் தொடர்பின் அடிப்படையில், உலகெங்கிலும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வழங்குவோம். (GAVI நாடுகள்)

    கேள்வி: இந்த தடுப்பூசியின் நிர்வாகத்தில் இந்திய அரசாங்கம் உங்களை அணுகி ஏதாவது அக்கறை காட்டியுள்ளதா?

    இதுவரை, நாங்கள் உரிம சோதனைகளுக்கான ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறோம், ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறோம்." இவ்வாறு கூறினார்.

    ஒரு நாளில் கொரோனாவால் அதிக மரணம்.. அமெரிக்காவை முந்தி இந்தியா 2வது இடம்

    English summary
    COVID-19 vaccine to cost Rs 1,000 per dose, the mass production of vaccine against the COVID-19 will start in the first quarter of next year while the human trials in India will start next month. says Adra Poonawalla, CEO of Serum Institute
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X