புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு காலத்தில் குதிரை வளர்ப்பு.. இன்று ஆக்ஸ்போர்ட் வாக்சின்.. கலக்க வரும் பூனாவாலா குடும்பம்!

Google Oneindia Tamil News

புனே: இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து மீது உலக நாடுகள் பெட் கட்டி வருகின்றன. புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் இந்த மருந்தை மில்லியன், பில்லியன் கணக்கில் தயாரிப்பதற்கு ரெடியாகி வருகிறது. இந்தியாவுக்கு இந்த இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பு மருந்து ஆயிரம் ரூபாய் என்ற விலையில் வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.

பிரிட்டன் ஆக்ஸ்போர்டு கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து இன்னும் மூன்றாம் கட்டத்தை தாண்டவில்லை. மூன்று கட்ட மனித ஆய்வு வெற்றி பெற்றால்தான், அந்த தடுப்பு ஊசி மனிதர்களுக்கு போடுவதற்கு தகுதியானது ஆகிறது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில் மனித பரிசோதனை... தயாரானது சீரம்!! ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து... இந்தியாவில் மனித பரிசோதனை... தயாரானது சீரம்!!

இப்படித்தான் மருந்து

இப்படித்தான் மருந்து

கடந்த மே மாதம் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ஒரு சிறிய ஐஸ் பெட்டியில் ஒரு மில்லிமீட்டர் குப்பி ஒன்று வந்தது. அந்த குப்பியை மிகவும் கவனமாக லேப்புக்குள் எடுத்துச் சென்றனர். பின்னர் அந்தக் குப்பிக்குள் இருப்பதை பிளாஸ்க்கில் ஊற்றினர். பின்னர் அதற்குள் வைட்டமின்கள், சர்க்கரை ஆகியவற்றை கொட்டினர். இதன் மூலம் பில்லியன் கணக்கில் செல்களை உருவாக்குவதற்காக அவ்வாறு போடப்பட்டது. கொரோனா வைரஸூக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதை இந்த செல்கள்தான் உறுதிபடுத்தும்.

தொலைபேசி அழைப்புகள்

தொலைபேசி அழைப்புகள்

இந்த தடுப்பு மருந்து இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பு சீரம் இன்ஸ்டிடியூட் பெரிய அளவில் தயாரித்து வருகிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் 500 டோஸ் மருந்து தயாரிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனாவாலா தெரிவித்து இருந்தார். கொரானா தடுப்பு மருந்தை சீரம் தயாரிக்க இருக்கிறது என்ற தகவல் வெளியானதுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள், பல்வேறு நாட்டின் பிரதமர்கள் இவருடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1.5 பில்லியன் டோஸ்

1.5 பில்லியன் டோஸ்

ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. ஆண்டுக்கு 1.5 பில்லியன் டோஸ்களை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது. உலக நாடுகளில் இருக்கும் குழந்தைகளில் பாதிப்பேருக்கு சீரம் இன்ஸ்டிடியூட்டின் தடுப்பு மருந்துதான் போடப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுமா

ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படுமா

முன்பு போல் தடுப்பு மருந்தை இந்த முறை சீரம் இன்ஸ்டிடியூட் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவுடன், மருந்தின் அவசியத்தை, முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தற்போது, கொரோனா தடுப்பு மருந்தை ஆக்ஸ்போர்டு உறுதி செய்தாலும், ஏற்றுமதி செய்வதில் சிக்கல் எழலாம். இந்தியாவில் இருக்கும் 130 கோடி மக்களுக்கும் இந்த தடுப்பு மருந்து தேவைப்படும்.

50 - 50 தயாரிப்பு

50 - 50 தயாரிப்பு

ஆனால், ஏழை நாடுகளுக்கு தடுப்பு மருந்து அனுப்புவதை பிரதமர் மோடி அரசு தடை செய்யாது என்று அடர் பூனாவாலா நம்பிக்கை அளித்துள்ளார். இந்தியாவுக்கு 50 சதவீதம் என்றால், ஏழை நாடுகளுக்கு 50 சதவீதம் தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என்று அடர் தெரிவித்துள்ளார். அதேசமயம் நாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கலாம் என்று கூறுகிறார்.

ஆஸ்ட்ராஜெனிகா

ஆஸ்ட்ராஜெனிகா

அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க பில்லியன் டாலர்களை கொட்டி வருகிறது. நாடுகளுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யார் முதலில் இந்த மருந்தை அறிமுகம் செய்வது என்பதில் போட்டா போட்டியே ஏற்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன், ஃபைசர், சனோஃபி, ஆஸ்ட்ராஜெனிகா ஆகியவை கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.

ஐரோப்பா

ஐரோப்பா

ஆக்ஸ்போர்டு உடன் கைகோர்த்து இருக்கும் ஆக்ஸ்போர்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு தடுப்பு மருந்துகளை தயாரிக்க அனுமதி பெற்றுள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து 70-80 சதவீதம் பலன் அளிக்கும் என்று அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து

தடுப்பு மருந்து

ஒரு காலத்தில் குதிரை வளர்த்து வந்த பூனாவாலா குடும்பம் இன்று நோய் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் கொடி கட்டி பறந்து வருகிறது. அடர் பூனாவாலா மற்றும் அவரது தந்தை இருவரும் தற்போது எப்படி மருந்து தயாரிப்புக்கு மாறினர் என்பது சுவராசியாமான தகவல்.

ரத்த சீரம்

ரத்த சீரம்

கடந்த 50ஆண்டுகளுக்கும் மேலாக பூனாவாலா குடும்பத்தினர் மருந்து சோதனைகளுக்கு குதிரைகளை நன்கொடையாக அளித்து வந்தனர். பின்னர் ஏன் நாம் நன்கொடையாக கொடுக்க வேண்டும். இந்த தொழிலில் நாம் ஏன் ஈடுபடக் கூடாது என்று யோசித்தனர். அப்படி பிறந்ததுதான் சீரம் இன்ஸ்டிடியூட். தடுப்பு மருந்தை குதிரைக்கு செலுத்தி, பின்னர் அதனிடம் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரத்த சீரத்தை எடுத்து, அதன் பின்னர் தடுப்பு மருந்து தயாரித்து வந்தனர்.

போலியோ தடுப்பு மருந்து

போலியோ தடுப்பு மருந்து

இப்படிதான், 1967ல் இருந்து தடுப்பு மருந்துகள் தயாரிப்பதை முன்னெடுத்தார் சைரஸ். பாம்பு கடிக்கான தடுப்பு மருந்து, காச நோய் தடுப்பு மருந்து, ஹெபபடிஸ், போலியோ தடுப்பு மருந்து, ஃபுளு ஆகியவற்றுக்கு தடுப்பு மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தனர். புனேவில் இருக்கும் பண்ணையில் குதிரைகளை வளர்த்து வருகிறார். தற்போது தடுப்பு மருந்து தயாரிப்பு மன்னனாக திகழ்ந்து வருகிறது.

5 பில்லியன் டாலர் சொத்து

5 பில்லியன் டாலர் சொத்து

இந்தியாவில் குறைந்த வருமானத்தில் கிடைக்கும் ஊழியர்கள், உயர் தொழில்நுட்பம் இரண்டையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் சைரஸ். யுனிசெப்பிடம் இருந்து சீரம் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு கான்ட்ராக்ட் கிடைத்துள்ளது. உலகிற்கு குறைந்த விலையில் மருந்து ஏற்றுமதி செய்து இன்று 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களுக்கு அதிபராக இருக்கிறார்.

ரோல்ஸ் ராய், ஃபெராரி

ரோல்ஸ் ராய், ஃபெராரி

2011ல் இருந்து சீரம் இன்ஸ்ட்டிடியூட்டின் நிர்வாகத்தை அடர் பூனாவாலா எடுத்துக் கொண்டார். இதன் பின்னர் தொழிலை விரிவாக்கி 800 மில்லியன் டாலர் வருமானமாக உயர்த்தியுள்ளார். மும்பையில் இருக்கும் மகாராஜா அரண்மனையை 113 மில்லியன் டாலருக்கு வாங்கினர். இந்த அரண்மனையில்தான் வார இறுதி நாட்களை கழித்து வருகின்றனர். ரோல்ஸ் ராய், ஃபெராரி இவைதான் இவர்களது வாகனங்கள். சின்ன ஐடியா, பெரிய லாபம் என்று பயணிக்கிறது பூனாவாலா குடும்பம்.

English summary
Cyrus Poonawalla: one's breeding the Horse is now producing the vaccine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X