புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புனே -கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் தீ விபத்து... 5 பேர் உயிரிழப்பு எனத் தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் முயற்ச்சியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

புனோ: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனோவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 Fire breaks out at Terminal 1 gate of Serum Institute of India in Pune

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்க போராடி வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளை அவசர காலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 Fire breaks out at Terminal 1 gate of Serum Institute of India in Pune

புனோவில் உள்ள சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுகிறது. அங்கு தயாரிக்கப்பட்ட மருந்துக்கள் பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று புனோவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே இந்த விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

English summary
Fire breaks out at Terminal 1 gate of Serum Institute of India in Pune. 10 fire tenders present at Serum Institute of India in Pune, where a fire broke out at Terminal 1 gate. More details awaited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X