புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்ல செய்தி.. இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் கருவி ரெடி... விலை ரூ. 80000, சூப்பர் தகவல்

Google Oneindia Tamil News

புனே: இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கி உள்ளது. இந்த கருவியின் விலை ரூ.80000 ஆகும்., ஒரு கருவியில் 100 பேரை சோதிக்க முடியும்.

மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 511 பேருக்கு பரவி உள்ளது. 10 பேர் இதுவரை இறந்துள்ளார்கள். இந்த வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அத்துடன் மக்களிடையே சமூக விலக்கியிருத்தலை உருவாக்குவதற்காக 144 தடை உத்தரவினை பெரும்பாலான மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன.

கொரோனா கண்காணிப்பு வளையத்தில் தமிழகம் முழுக்க 15,298 பேர்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் கொரோனா கண்காணிப்பு வளையத்தில் தமிழகம் முழுக்க 15,298 பேர்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரானா பரவல்

கொரானா பரவல்

தற்போதைய நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அளவில் தான் பரவி வருகிறது.விதி விலக்காக சில இடங்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் அதாவது மூன்றாவது ஸ்டேஜில் கொரோனா பரவி வருகிறது. இந்த நிலை நாடு முழுவதும் ஏற்படுவதை தடுக்க மிகப்பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறைவான மையங்கள்

குறைவான மையங்கள்

மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அனைவருக்கும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் குறைந்த அளவே நாடு முழுவதும்உள்ளன. இதேபோல் கொரோனாவைரஸ் பரிசோதனை கருவிகளும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் முடிவுகளை அறிவதற்கு காலதாமதங்கள் ஏற்பட்டு வருகிறது.

புனேவில் கொரோனா கருவி

புனேவில் கொரோனா கருவி

இந்நிலையில் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை இந்தியாவிலேயே உருவாக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்ட மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கொரோனா வைரஸ் (கோவிட் 19) பரிசோதனை கருவியை தற்போது உருவாக்கி உள்ளது.

100 பேரை சோதிக்கலாம்

100 பேரை சோதிக்கலாம்

இந்த கோவிட் 19 சோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அண்மையில் அனுமதி அளித்தது. அந்த கருவியின் விலை ரூ.80000 ஆகும். ஒரு சிங்கிள் கருவியின் மூலம் 100 நோயாளிகளை சோதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் விஞ்ஞானி ரஞ்சித் தேசாய் கூறுகைகயில், "ஒரு வாரத்தில் 1 முதல் 1.5 லட்சம் சோதனைகளை நாம் தயாரிக்க முடியும், பொதுமக்களுக்காக எங்கள் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்கிறோம். இந்த கருவிகள் இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் விற்கப்படும் விலையில் கால் பங்கு என்றார்.

வெளிநாட்டு கருவிகள்

அதாவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி 3,20,000 என்று விற்கப்படும் நிலையில் இந்த கருவியின் விலைவெறும் 80000 மட்டுமே. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் மற்றும் கண்காணிப்பில் உள்ள அத்தனை பேரையும் சோதிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன. எனவே நிறைய கருவிகளும், சோதனை மையங்களும் இப்போதைக்கு கொரோனா பரவலை தடுக்க முதல் தேவையாகும்.

English summary
India's first indigenous COVID19 testing kit ready- A single kit costs Rs 80,000 & can test 100 patients, approved by the Indian Council of Medical Research
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X