புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ் டிக்கெட் 10 ரூபாய்.. 3 ரூபாய்தான் கையில் இருக்கு.. 7 ரூபா கொடுங்க போதும்.. வியக்க வைத்த நபர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    இப்படியும் ஒரு மனுஷனா வியக்க வைத்த நபர் ..!

    புனே: மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்துக்காரர் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார் தனது செயலால். இப்படியும் ஒருவர் இந்தக் காலத்தில் இருக்க முடியுமான்னு எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போயுள்ளனர்.

    புனே அருகில் உள்ளது பிங்கலி கிராமம். ரொம்ப சின்ன கிராமம்தான். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தானாஜி ஜக்தாலே. 54 வயதாகிறது. ஒரு வேலையாக புனே வந்தார் அவர். வந்த இடத்தில் அவருக்கு ஒரு சத்திய சோதனை காத்திருந்தது.

    தான் வந்த வேலையை முடித்து விட்டு ஊர் திரும்பலாம் என பஸ் ஸ்டாப்புக்கு வந்தார் ஜக்தாலே. அங்கு ஒரு இடத்தில் பணக் கட்டுக்கள் சிதறிக் கிடந்தன. இதைப் பார்த்துப் பதறிப் போன ஜக்தாலே அதை எடுத்தார். அங்கு நின்றிருந்த சிலரிடம் இது உங்களோடதா என்று கேட்டார். யாரும் இல்லை என்று கூறியுள்ளனர்.

    3 வயசு குழந்தைங்க.. தகப்பன் கண் முன்னாடியே பறி போன உயிர்.. கொடூர மாஞ்சா நூல்.. மக்கள் கடுங் கோபம்3 வயசு குழந்தைங்க.. தகப்பன் கண் முன்னாடியே பறி போன உயிர்.. கொடூர மாஞ்சா நூல்.. மக்கள் கடுங் கோபம்

    என்னாச்சு?

    என்னாச்சு?

    அப்போது அந்தப் பகுதியில் ஒரு நபர் பதட்டமாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் போய், என்னாச்சு என்று கேட்டுள்ளார். "எனது மனைவிக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக ரூ. 40,000 பணத்தை எடுத்து வந்தேன். வழியில் எங்கோ விழுந்து விட்டது. அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    நிம்மதி

    நிம்மதி

    இதைக் கேட்ட ஜக்தாலே, "இந்தப் பணமா பாருங்க" என்று கேட்டுள்ளார். பணத்தை வாங்கிப் பார்த்த அந்த நபர், ஆமாம் இதுதான் என்று கூறி நிம்மதியடைந்தார். அடுத்த விநாடியே, ஜக்தாலேவின் செயலால் ஆச்சரியமடைந்தார், மகிழ்ச்சியும் அடைந்தார். அவரைப் பாராட்டிய அவர் 1000 ரூபாய் அவரிடம் கொடுத்தார்.

    3 ரூபாய்

    3 ரூபாய்

    ஆனால் அதை வாங்க மறுத்த ஜக்தாலே, "வேண்டாங்க. நான் ஊருக்குப் போகணும். பஸ் டிக்கெட் 10 ரூபாய். 3 ரூபாய்தான் கையில் இருக்கு. 7 ரூபா மட்டும் கொடுங்க போதும்" என்று கூற அந்த நபர் அப்படியே அதிர்ச்சியாகி விட்டார். இப்படி ஒரு மனிதரா,, இப்படி ஒரு அடக்கமா என்று வியந்து போய் விட்டார் அவர்.

    பாராட்டு

    பாராட்டு

    தற்போது இந்த செய்தி மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் அமெரிக்கா வரை பரவி ஜக்தாலேவை பலரும் பாராட்டிக் குவிக்கின்றனர். உள்ளூர் எம்எல்ஏ சிவேந்திர ராஜே போஸ்லே, முன்னாள் எம்பி உதயன்ராஜே போஸ்லே ஆகியோர் ஜக்தாலேவைப் பாராட்டி ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஆனால் பரிசை வாங்க மறுத்து விட்டார் ஜக்தாலே.

    5 லட்சம் பரிசு

    5 லட்சம் பரிசு

    அதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஜக்தாலேவின் நல்ல மனசுக்காக அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு கொடுக்க முன்வந்தாராம். அதையும் மறுத்து விட்டாராம் இந்த ஜக்தாலே.. ! இப்படியும் ஒரு மனுஷனா இந்தக் காலத்தில் என்று நாம் ஆச்சரியப்பட்டது சரிதானே.

    English summary
    54 year old man with only Rs 3 in his Pocket but Returns Rs 40k lying at bus Stop and he refuses any cash reward near maharashtra
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X