புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸை வைத்து 'ஏப்ரல் பூல்' ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

புனே: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Recommended Video

    கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளும் அதற்கான பதில்களும் | Dr.Aravindha Raj

    ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை முட்டாளாக்கும் விதமாக ஏதேனும் இல்லாத ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து பின்னர் அது இல்லை என்று நையாண்டி செய்வது மக்களின் வழக்கம்.

     No April Fool’s Day jokes on coronavirus , warn police

    காலமாற்றத்தால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் முட்டாளாக்கும் விதமாக கிண்டல் பதிவுகள், பொய்யான நையாண்டி பதிவுகளை பரப்புவார்கள். இந்த பதிவுகளை பலரும் உண்மை என்று நம்பிவிடுவதும் உண்டு. சிலநேரங்களில் ஆபத்தையும் விளைவித்துள்ளது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் முட்டாள்கள் தின நகைச்சுவை அல்லது சமூக ஊடகங்களில் நையாண்டி என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளையோ அல்லது தவறான தகவல்களையோ பரப்ப வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இது தொடர்பாக புனே காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில். "ஏப்ரல் 1 ஆம் தேதி, நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் புரளி பரப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் பாதிப்பில்லாத சேட்டைகளை விளையாடுகிறார்கள். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்படடுள்ளது.

    அருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்! அருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்!

    எனவே இந்த சூழலில் மக்கள் எதையும் பரப்பக்கூடாது. வைரஸ் பற்றி பொய்யான தகவல்கள் அல்லது செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பினாலோ அல்லது ஊரடங்கு குறித்து தவறான வதந்திகள் பரப்பினாலோ, மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் ஊரடங்கை மக்கள் மீறும் நிலை உருவாகும். எனவே அத்தகைய செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது "என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை புனே ஊரகப்பகுதி காவல்துறை துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி நாராயண் ஷிர்காவ்கர் வெளியிட்டுள்ளார்.

    இதனிடையே பெங்களூருவில் போலியான என்95 போலி மாஸ்குகளை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    English summary
    Police on Monday asked people in Pune district of Maharashtra not to spread rumours or false information regarding coronavirus in the name of April Fool's Day jokes or pranks on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X