புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனிகா...தடுப்பு மருந்து...இந்தியாவில் நிறுத்தம்...இதுதான் காரணம்!!

Google Oneindia Tamil News

புனே: ஆக்ஸ்போர்டு, ஆஸ்ட்ராஜெனிகா கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் பரிசோதனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பெண் ஒருவருக்கு நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டு, தண்டுவடத்தை பாதித்ததுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

ஆஸ்ட்ராஜெனிகாவின் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த மருந்து இந்தியாவில் பலன் அளிக்காதது குறித்து அதன் தலைமை நிர்வாகி பாஸ்கல் சோரியட் பேசியுள்ளார். அதுதொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ''அரிதாக பாதிக்கப்படும் transverse myelitis (முதுகு தண்டுவடத்தில் வீக்கம், தொற்று) எனப்படும் நோயால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறிகுறிதான் வெளிப்பட்டுள்ளது. அவரது நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து விரைவில் வெளியேறுவார்.

Oxford, AstraZeneca trial paused in India after developed neurological symptoms

இந்தியாவில் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உண்மையான கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது. போலி மருந்து அளிக்கப்படவில்லை. மூன்றாம் கட்ட மனித ஆய்வில் உண்மையான தடுப்பு மருந்து அல்லது போலி தடுப்பு மருந்து அளித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். யாருக்கு உண்மையான மருந்து அளிக்கப்பட்டுள்ளது, யாருக்கு போலி மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பரிசோதனையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரிவிக்கப்படாது. அவர்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தப்படும். பின்னர் சில நாட்கள் கழித்து ஆய்வில் முடிகள் மேற்கொள்ளப்படும்.

இதேபோன்றுதான் கடந்த ஜூலை மாதமும் ஒருவருக்கு நரம்பு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு காரணம் திசுக்கள் இறுக்கமாகும் sclerosis எனப்படும் நரம்பு பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கும் தடுப்பு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நிகழ்வுகள் மனித பரிசோதனையின்போது ஏற்படுவது சகஜம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போது டஜன் கணக்கில் கொரோனா தடுப்பு மருந்து மனித ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதான் முதல் நிகழ்வாக நடந்து இருக்கிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்து...விரைவில் கிடைக்க...கோவாக்ஸில் சேருகிறதா இந்தியா!! கொரோனா தடுப்பு மருந்து...விரைவில் கிடைக்க...கோவாக்ஸில் சேருகிறதா இந்தியா!!

இந்தியாவில் ஆஸ்ட்ராஜெனிகா ஆக்ஸ்போர்டு மருந்து மனித ஆய்வு நிறுத்தம் குறித்த தகவல்களை ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்று புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உலகில் இருக்கும் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் நடுத்தர நாடுகளுக்கு சீரம் இன்ஸ்டிடியூட்தான் மருந்து தயாரித்து வருகிறது. இதுதான் உலகிலேயே அதிகளவிலான தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்தியாவில் இந்த மனித ஆய்வை இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அனுமதியுடன்தான் சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Oxford, AstraZeneca trial paused in India after developed neurological symptoms
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X