• search
புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஏடா கூடமாக "வேற மாதிரி" நடந்த ப்ரீ வெட்டிங் ஷூட்! வளைத்து வளைத்து மணப்பெண் போஸ்.. பாய்ந்தது வழக்கு

Google Oneindia Tamil News

புனே: திருமணம் செய்யப் போகும் நேரத்தில் மணப்பெண் செய்யும் வேலையா இது.. இப்போ பாருங்க வசமாக சிக்கிக் கொண்டார் என்று மொத்த மாநில மக்களும் விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

  அடேய்! மணபெண் விபரீத ஆசை கடைசியில் செம்ம Twist | Oneindia Tamil

  இப்போதெல்லாம் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் வேறு வகையில் சென்று கொண்டு இருக்கிறது. மணமகள் உடலில் அணிந்திருக்கும் ஆடை அளவு குறைந்து கொண்டே செல்வது தான் பிரீ வெடிங் ஷூட் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது.

  மேகதாது அணை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்? மேகதாது அணை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்?

  உடலை காட்டுவது என்பது சில புகைப்படக்காரர்கள் விருப்பமாக இருந்தால் இன்னும் சிலர் வித்தியாசமாக முயற்சி செய்வதில் வல்லவர்கள் .

  பல ஐடியாக்கள்

  பல ஐடியாக்கள்

  செயற்கையாக மழை பெய்ய வைத்து போட்டோ எடுப்பது.. கலர்கலர் புகையை மணமக்கள் பின்னால் கிளப்பிவிட்டு அதன் பின்னணியில் புகைப்படம் எடுப்பது என வெட்டிங் ஷூட் பலவகைப்படும். ஆனால் அதை விட வித்தியாசமாக செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு சிக்கலில் மாட்டியுள்ளார் ஒரு மணப்பெண்.

  அணி வகுத்த வாகனங்கள்

  அணி வகுத்த வாகனங்கள்

  புனே நகரைச் சேர்ந்தவர் அந்தப் பெண். வயது 23. கடந்த 13ஆம் தேதி அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. சஸ்வத் என்ற பகுதியில் திருமண மண்டபம் அமைந்திருந்ததால் தனது வீட்டிலிருந்து வாகனம் மூலமாக மணப்பெண் அங்கு செல்ல வேண்டியதாக இருந்தது. மணப்பெண் ஸ்கார்பியோ வாகனமொன்றில் செல்ல முன்னும் பின்னும் அவரது உறவினர்களின் வண்டிகள் அணிவகுத்தன.

  சாலையில் வைத்து போட்டோ

  சாலையில் வைத்து போட்டோ

  இந்த கார் இயற்கை எழில் கொஞ்சும் டைவ் காட் என்ற மலைப்பகுதி வழியாக செல்லும்போது புகைப்படக்காரர் ஒரு ஐடியா செய்தார். மணமகளை காரிலிருந்து இறங்க செய்து அந்த ஸ்கார்பியோ காரின் போனட் பகுதியின் மேல் அமர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . மணமகளும் அவ்வாறு செய்தார். முன்பகுதியில், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன் மேலேயே மணமகள் அமர்ந்து இருந்தார். பின்னணியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இருந்தது . இதையெல்லாம் சேர்த்து அற்புதமாக புகைப்படம் எடுக்கலாம் என்று புகைப்படக்காரர் நினைத்து வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார். வீடியோவும் எடுக்கப்பட்டது.

  சிக்கலில் மணப்பெண்

  சிக்கலில் மணப்பெண்

  மணமகளும் திருமண ஆல்பம் சிறப்பாக இருக்க போகிறது என்று நினைத்து.. கேட்டபடி எல்லாம் போஸ் கொடுத்தார். ஆனால் இப்போது இதில்தான் சிக்கல் வந்துள்ளது. இதை புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் காவல்துறை ஆக்ஷனில் குதித்தது. மணமகள், புகைப்படக்காரர், வாகனத்தின் டிரைவர் மற்றும் அந்த வாகனத்தில் அமர்ந்த உறவினர்கள் என, அத்தனை பேர் மீதும் வழக்குப் போட்டிருக்கிறது காவல்துறை.

  இரு வகைகளில் பாய்ந்த சட்டம்

  இரு வகைகளில் பாய்ந்த சட்டம்

  இரண்டு வகைகளில் மணமகள் மீது வழக்குப் பதியப்பட்டது. அதில் ஒன்று கொரோனா பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ். இன்னொன்று மோட்டார் வாகன சட்டம் மற்றும் அதுதொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருக்கிறது. காரின் மீது அமர்ந்து பயணம் செய்வதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடம் கிடையாது. அது ஆபத்தானது என்பதால் தடை விதிக்கப்பட்ட ஒன்று. எனவே அதில் அமர்ந்தபடி மணமகள் பயணம் செய்தது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இன்னொருபக்கம். பொது இடத்தில் முக கவசம் அணியாமல் பயணம் செய்து கொண்டு வந்தார் அந்த மணப் பெண் என்பதால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும் மகாராஷ்டிராகொரோனா ஒழுங்குமுறை சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

  ஆர்வக் கோளாறு கூடாது

  ஆர்வக் கோளாறு கூடாது

  இந்த வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக அவருக்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. புதிய வாழ்க்கையை பல கனவுகளோடு தொடங்க இருந்த அவர் தற்போது காவல் நிலையத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ஆர்வம் இருக்கலாம் ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை தீர யோசித்த பிறகு செய்வது நல்லது நல்லது. அல்லது ஒரு முக்கியமான நாளில் கூட இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

  மணப்பெண்ணுக்கு ஆதரவு

  மணப்பெண்ணுக்கு ஆதரவு

  இது ஒரு பக்கம் என்றால் மணப் பெண்ணுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துத் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. வாழ்க்கையின் மிக முக்கியமான நாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். அந்த மகிழ்ச்சியில் காவல்துறை இடையூறு செய்யக்கூடாது என்கிறார்கள் சிலர். சாமானியர்கள் மீது மட்டும் தான் சட்டம் நடவடிக்கை எடுக்கிறது .அமைச்சரவை கூட்டத்தின் போது முக கவசம் அணியாமல் அமைச்சர்கள் பங்கேற்றனர். அந்த புகைப்படம் வெளிவந்தது. அதுபற்றிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கின்றனர் சிலர்.

  தவறுக்கு தவறு சரியில்லையே

  தவறுக்கு தவறு சரியில்லையே

  இருப்பினும் ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியான பதிலாக இருக்க முடியாது. போனட்டில் பயணம் செய்து வரும்போது அந்தப் பெண் கீழே விழுந்து இருந்தால் எதிரே வரும் வாகனங்களுக்கு ஆபத்து, இவருக்கும் ஆபத்து. அதே போன்று முக கவசம் அணியாமல் செல்வது இவரால் பிறருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், பிறரால் இவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். சட்ட திட்டங்கள், என்பது நமது நன்மைக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொண்ட அனைவருக்கும் நல்லது.

  English summary
  Pune bride suv bonnet: 23 year old woman from Pune was charged for sitting on the bonnet of a SUV car for pre wedding shoot. She was photographed riding on the bonnet of an SUV without a mask which is wrong under Maharashtra covid regulation act.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X