புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூனை, நாய்கள் கொல்லப்படுவது பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம்; எங்கு தெரியுமா?

தெருநாய்களைக் கொலை செய்பவர்களைப் பற்றி துப்பு தந்தால் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புனே: பூனைகள் மற்றும் தெருநாய்கள் கொல்லப்படுவது தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என மகாராஷ்டிர பிரபல பிராணிகள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்துக்கு உட்பட்ட எர்ரவாடா பகுதியில் கடந்த மாதத்தில் மட்டும் 14 பூனைகளும், 7 நாய்களும் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டன. செல்லப்பிராணிகளாக அல்லாமல், தெருவில் சுற்றித் திரிந்ததால் அவைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

reward announced for info about killing of stray dogs and cats


ஆனால், அவற்றை யார் கொன்றது என்பது பற்றி தெரியவில்லை. இதனால், அம்மாநில பிரபல பிராணிகள் நலச் சங்கமான 'ஹியூமேன் சொசைட்டி’ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெருநாய்கள் மற்றும் பூனைகள் கொல்லப்படுவது பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் அளிப்பதற்காக, 8899117773 என்ற கைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து தெருவில் சுற்றும் நாய்கள் மற்றும் பூனைகளைக் கொல்லும் நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

English summary
Animal rights organisation Humane Society International/India has announced a reward of Rs 50,000 for information about the unidentified culprits who poisoned stray cats and dogs in Yerawada area of the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X