புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி

மகாராஷ்டிராவில் 8 பேரை கொன்ற புலி சிக்கியது

Google Oneindia Tamil News

புனே: கடந்த 21 மாதங்களில் மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற புலி, இன்றுதான் மகாராஷ்டிரா வனத்துறையினரிடம் சிக்கியது.

மகாராஷ்டிரா மாநிலம் ராஜுரா பகுதியிருலள்ள வனப்பகுதி கிராமங்களில் 8 பேரை ஒரு புலி அடித்து கொன்றது.. கடந்த வருடம் ஜனவரி முதல் 8 பேர் உட்ப 25 கால்நடைகளையும் அந்த புலி அடித்து கொன்றுள்ளது.. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தது.

Tiger caught in trap in Maharashtra

வனத்துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி கம்பாடாவில் புலி ஒருவரைக் கொன்றது, பின்னர் மற்றொருவர் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 25 ஆம் தேதிகளில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜனவரி 4, மார்ச் 6, ஆகஸ்ட் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2020 ஆகிய தேதிகளில் கொல்லப்பட்டனர்.

எனவே புலியை பிடிக்க வனத்துறையினர் தயாராயினர்.. ராஜுராததெஸ்லில் பகுதியில்தான் அந்த புலி பதுங்கி இருப்பதாக சொல்லப்பட்டது.. மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய தொழிலம் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்புகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.. புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு

அதனால், ஒருகட்டத்தில் அந்த புலியை சுட்டுக் கொன்று விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றுகூட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து, புலியை பிடிக்க 150 பேர் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டப்பட்டது.. புலி நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு, வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 11 முதல் புலியை பிடிக்கும் பணி தீவிரமானது.. புலியைக் கண்காணிக்கும் பொருட்டு, அந்த பகுதியில் 150 கேமராக்கள் நிறுவப்பட்டு, இரவும் பகலும் அணிகள் கண்காணிக்கப்பட்டன. இதையடுத்து இன்று அந்த புலி சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

English summary
Tiger caught in trap in Maharashtra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X