சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து மாநிலங்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் விநியோகிக்கும் பணி தொடங்கியது
புனே: மகாராஷ்டிராவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கொரோனாவை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கியது.
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 1,04,79,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,51,364 ஆகும். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளது. இதனிடையே வரும் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அண்மையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைகளும் நடத்தப்பட்டன.
The first consignment of the vaccine has been dispatched from the facility of Serum Institute of India here. We have made elaborate security arrangements: Namrata Patil, DCP (Zone 5), Pune https://t.co/yuh7UPAGtd pic.twitter.com/fhPzln7jd7
— ANI (@ANI) January 11, 2021
இந்த நிலையில் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணிகள் இன்று அதிகாலை தொடங்கியது. முதல் கட்டமாக 3 டிரக்குகளில் கோவிஷில்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு புனே சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தன.
நாட்டின் 13 இடங்களுக்கு 8 விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கொண்டு சேர்க்கப்பட உள்ளன. முதல் விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. சென்னைக்கு காலையில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேரும் என தெரிகிறது.