புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட கொடுமையே.. இடைதேர்தலுக்கு வந்த சோதனை.. மெழுகுவர்த்தி ஒளியில் ஓட்டு போட்ட மக்கள்!!

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடந்தது

Google Oneindia Tamil News

புனே: இன்று நடந்து முடிந்த இடைத்தேர்தல் பெரிய சவாலாகதான் பார்க்கப்படுகிறது.. எத்தனையோ இடர்பாடுகள், தொந்தரவுகளுக்கு இடையே இந்த இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கேரளா, மகாராஷ்டிரா உட்பட பேய் மழை இன்று கொட்டித் தீர்த்தது.. குறிப்பாக மகாராஷ்டிராவில் இன்னும் மழை நிற்கவே இல்லை. நேற்று முன்தினம்கூட தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத்பவார், கொட்டும் மழையில் நனைந்தபடிதான் பிரச்சாரம் செய்துவிட்டு போனார். இன்று தேர்தல் நாளன்றும் மழை விடவில்லை.

Voting held in candlelight due to no electricity in pune

ஆளும் பாஜக - சிவசேனா ஒரு அணி, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக ஒரு அணி.. என்று இங்கு மோதுகின்றன. இது தவிர வஞ்சித் பகுஜன் அகாடி, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா, ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வலுவாக மோதலில் இறங்கின. காலையிலேயே வாக்கு பதிவு தொடங்கிவிட்டது. கூடவே மழையும் வந்துவிட்டது.

ஏராளமானோர் குடைகளை பிடித்து கொண்டு வந்து ஓட்டு போட்டு சென்றனர். அதேபோல, மழை காரணமாக புனே தொகுதியில் உள்ள சிவாஜி நகர் பூத்தில் கரண்ட் போய்விட்டது. இதனால் அந்த அந்த வாக்குசாவடி அறையை கும்மிருட்டாக இருந்தது. தேர்தல் அதிகாரிகள் இருக்கும் பகுதி முழுசும் இருட்டாகிவிட்டது.

Voting held in candlelight due to no electricity in pune

எனினும் உடனடியாக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி பக்கத்தில் வைத்து கொண்டு, உதவியோடு, வாக்காளர்களின் பெயர்களை சரி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். பட்ட பகலில் மெழுகுவர்த்தி உதவியுடன் ஓட்டு போட்டதை பார்க்க புதுசாக இருந்தது. நல்லவேளை.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பேட்டரியில் இயங்குவதால் அந்த பிரச்சனை ஏற்படவில்லை. தொடர்ந்து வாக்குப்பதிவும் நடைபெற்றது.

800 கோடிக்கு கணக்கே இல்லை.. ரூ.100 கோடிக்கு ரொக்கம்.. அதிரவைக்கும் கல்கி ஆசிரமம்.. யார் வீட்டு பணம்?800 கோடிக்கு கணக்கே இல்லை.. ரூ.100 கோடிக்கு ரொக்கம்.. அதிரவைக்கும் கல்கி ஆசிரமம்.. யார் வீட்டு பணம்?

அதேபோல, ஓட்டு போட வந்த மக்களின் ஆர்வமும் அனைவரையும் ஈர்த்தது. ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருந்த 102 வயது தாத்தா, வீல் சேருடன் ஓட்டு போட பூத்துக்கே வந்துவிட்டார். அவர் பெயர் ஹாஜி இப்ராகிம் சலீம். இவர் குடும்பத்தில் மொத்தம் 150 பேராம்.. அதனால் எல்லாரும் சேர்ந்து தாத்தாவை அழைத்து வந்து ஓட்டு போட வைத்துவிட்டு, திரும்பவும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

English summary
heavy rain in maharashtra and Voting held in candlelight due to no electricity in pune also
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X