புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொலைகார கொரானா வைரஸ்.. இதுதாங்க அறிகுறி.. உடனே நீங்க செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    புனே: கொரானா வைரஸ் உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த இந்த வைரஸ், அமெரிக்கா, சவுதி போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

    சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 830 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அல்லாது வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்தியாவிற்குள் இந்த வைரஸ் பரவாமல் இருக்க விமான நிலையங்களில், தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் குறித்து அறிந்து கொள்வது இன்றைய காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவமானது.

    மீன் மார்க்கெட்டில் உருவான வைரஸ்.. மருந்து கண்டுபிடிக்கவில்லை.. தவிக்கும் சீனா!மீன் மார்க்கெட்டில் உருவான வைரஸ்.. மருந்து கண்டுபிடிக்கவில்லை.. தவிக்கும் சீனா!

    புனே ரெடி

    புனே ரெடி

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வைரஸ் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள 10 ஆய்வகங்கள் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் கொரானா வைரசை பரிசோதிக்க முழுமையாக தயாராக உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது.
    இரு தினங்கள் முந்தைய நிலவரப்படி, கொரானா வைரஸ் எதுவும் இங்கு கண்டறியப்படவில்லை. கொரானா வைரஸ் ஒரு வகை நிமோனியாவை ஏற்படுத்துகிறது.

    ஆபத்து

    ஆபத்து

    கொரானா வைரஸ் முதலில் சீன நகரமான வுஹானில் ஒரு மொத்த கடல் உணவு சந்தையில் இருந்து பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது. இது முதலில் டிசம்பர் பிற்பகுதியில் வெளி உலகிற்கு தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் ஜலதோசம் ஏற்படுத்தும் வைரஸ்களைப் போலவே பரவுகிறது. இருமல், தும்மல் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியைத் தொடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது. எல்லோரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், சிறு குழந்தைகள் இந்த வைரஸின் அதிகபட்ச ஆபத்தில் உள்ளனர்.

    கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள்

    கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள்

    கொரோனா வைரஸ் அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே, கொரானா அறிகுறியும் ஒத்திருக்கின்றன, எனவே வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினமாகிறது. இருமல் மற்றும் சளி போன்ற வழக்கமான அறிகுறியாக இருந்தாலும், காய்ச்சல் நீடித்தால் தாமதிக்காதீர். நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை அடையாளம் காண உடனடியாக ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    கொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது?

    கொரோனா வைரஸ் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது?

    உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவுரை லிஸ்ட் வெளியிட்டுள்ளது, கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளைப் பற்றி மக்களுக்கு அது, தெரிவிக்கிறது. விலங்குகளிடமிருந்து, குறிப்பிட்ட, இந்த, வைரஸ் தோன்றியதால், பாதுகாப்பற்ற வகையில் பராமரிக்கப்படும் விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்க்குமாறு WHO மக்களிடம் கேட்டுள்ளது. கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இறைச்சி பயன்படுத்துவோர், நன்கு சமைத்த இறைச்சி பொருட்களை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    What is Corona virus symptoms and how we can escape from this, and why is it dangerous? here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X