புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. பேச்சில் அப்படி ஒரு வைராக்கியம்.. உறுதி.. சபாஷ் வேட்பாளர்!

இளம் விதவைக்கு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புனே: விஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. ஆனால் அப்படி ஒரு பேச்சு திறமை. அதனால்தான் இந்த ஏழை பெண்ணுக்கு எம்பியாக போட்டியிடும் வாய்ப்பு தேடி வந்துள்ளது!

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவிதான் விஷாலி. சுதாகர் ஒரு விவசாயி.

விவசாய விருத்திக்காக 70 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் சுதாகரால் வாங்கிய கடனை திருப்பி தர முடியவில்லை. அதனால் சுதாகர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011-ம் வருஷம் தற்கொலை செய்து கொண்டார்.

3500 ரூபாய்

3500 ரூபாய்

இதுக்கு பிறகு விஷாலி 2 குழந்தைகளை வைத்து கொண்டு ரொம்ப சிரமப்பட்டார். சொல்ல முடியாத அளவுக்கு வறுமை. அதனால், அங்கன்வாடியில் 3500 ரூபாய் சம்பளத்துல போய் சேர்ந்தார். இதை தவிர விதவை பென்ஷன் மாச மாசம் 600 ரூபாய் வந்தது. இதில்தான் பிள்ளைகளையும், குடும்பத்தையும் கவனித்து வந்தார்.

கருணாநிதி கட்டிக்காத்த வாக்கு வங்கி அப்படியே இருக்கா.. ஸ்டாலினுக்கு மே 23-ல் அக்னி பரீட்சை! கருணாநிதி கட்டிக்காத்த வாக்கு வங்கி அப்படியே இருக்கா.. ஸ்டாலினுக்கு மே 23-ல் அக்னி பரீட்சை!

பிரஹர் ஜனசக்தி

பிரஹர் ஜனசக்தி

ஒருநாள் விஷாலி அப்பகுதியில் நடந்த இலக்கிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் பிரஹர் ஜனசக்தி கட்சியின் எம்எல்ஏ கலந்து கொண்டார். விஷாலியின் பேச்சு திறமையை பார்த்து அசந்து விட்டார்.

வேட்பாளர்

வேட்பாளர்

எப்படியாவது அந்த இளம் விதவைக்கு நல்ல வழியை ஏற்படுத்த வேண்டும், அவரது திறமையை வெளிக்கொணர வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி, வரவிருக்கும் எம்பி தேர்தலில் அவர் கட்சியின் சார்பில் போட்டியிட ஒரு வாய்ப்பு தந்துள்ளார். ஆம்.. விஷாலி இப்போது பிரஹர் ஜனசக்தி கட்சியின் வேட்பாளர்!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

ஏற்கனவே வறுமையில் உள்ள தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வந்ததை விஷாலி முதலில் நம்பவே இல்லை. இருந்தாலும் தேர்தல் செலவுக்கு பணம் தேவைப்படுமே? அதனால் வாட்ஸ்அப் மூலம் தேர்தல் செலவுக்கு நிதி தேவை என்று வேண்டுகோள் விடுத்தார். விஷாலியின் நிலைமையை உணர்ந்த பலரும் உதவிகளை அள்ளி கொடுத்து வருகிறார்கள். இதுவரைக்கும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி சேர்ந்துள்ளாம்.

விவசாயிகள்

விவசாயிகள்

எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்ததை பற்றி விஷாலி சொல்லும்போது, "எனக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. விவசாயிகளின் பிரச்சனைக்கு குரல் கொடுப்பதுதான் என் லட்சியம்" என்கிறார்.

English summary
Young Widow contests in MP Election on behalf of Prahar Janshakti party in Maharashtra
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X