ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைன் விளையாட்டுகள்.. தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகன்..பாடம் புகட்டிய தந்தை

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ஆன்லைன் விளையாட்டுகளால் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகனுக்கு விசித்திரமாக அவரது தந்தை பாடம் புகட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவன். கடலாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் இருந்த அந்த மாணவன், தனது தந்தையின் போனில் ஃப்ரீ பையர் எனும் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்தார். கேம் அப்டேட் கேட்கும் நேரத்தில் தனது தாயின் ஏடிஎம் கார்டின் யுபிஐ நம்பரை பதிவு செய்துள்ளார்.

சீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடிசீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடி

ரூ 90 ஆயிரம் வரை

ரூ 90 ஆயிரம் வரை

இந்த நிலையில் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் வரை பணம் பறிபோனது. இந்த சிறுவனின் தந்தை செந்தில்குமார் இ சேவை மையம் நடத்தி வருகிறார். ஆன்லைன் மூலம் பொருள்களை ஆர்டர் செய்ய சிறுவனின் தாயார் சிறுவனின் உதவியை நாடியுள்ளார். இதனால் தாயின் வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரங்களும் சிறுவனுக்கு அத்துபடி.

ஆன்லைன் கணக்கு

ஆன்லைன் கணக்கு

இந்த நிலையில் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் விளையாட்டை விளையாட ரூ 90 ஆயிரம் வரை எடுத்த சிறுவன் அதற்கான மெசேஜ்களை டெலிட்டும் செய்து சாமர்த்தியமாக தப்பி வந்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் பணம் எடுக்க ஏடிஎம் சென்ற போது அதில் போதிய பேலன்ஸ் இல்லை என வந்தது.

விவகாரம்

விவகாரம்

இதையடுத்து 97 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருக்கும் போது எப்படி பணம் இல்லை என வரும் என வங்கிக்கு சென்று செந்தில்குமார் கேட்டபோதுதான் மகனின் ஆன்லைன் விவகாரம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து ஆத்திரமடையாத செந்தில்குமார், அடித்தால் விபரீதம் என்னவாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டார்.

5 நாட்கள்

5 நாட்கள்

உடனே மகனிடம் இதுகுறித்து பேசிய செந்தில்குமார் அவரை அடிக்காமல் ஒரு நூதன தண்டனை கொடுத்தார். அதன்படி 1 முதல் 90 ஆயிரம் வரை தவறில்லாமல் எழுதுமாறு தண்டனை விதித்தார். சிறுவனும் 5 நாட்கள் தொடர்ந்து எழுதியதில் 3,500 வரை எழுதினான். பின்னர் கை வலிப்பதால் இதை எழுதுவதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் விளையாடுவதை நிறுத்திவிடுவதாக கூறினான். இதனால் செந்தில்குமார் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

English summary
13 years boy spends Rs 90,000 on games leaves the game after his dad's different advice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X