ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிட்ட நெருங்கி வாங்க.. பக்கத்தில் வர வைத்து.. பலே பெண்கள்.. ஷாக் ஆன ராமநாதபுரம் பஸ்!

நகையை திருடிய 2 பெண்கள் கைதாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: "எங்க கிட்ட வந்து நெருங்கி நில்லுங்க" என்று சொல்லவும்.. பஸ்ஸில் நெருங்கி வந்து நின்றார் அந்த பெண்.. அப்போதுதான் 2 பெண்களும் தங்கள் வேலையை காட்டி உள்ளனர்!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பகுதி முத்துரெகுநாதபுரம்.. இங்கு வசித்து வரும் 62 வயது குஞ்சரம் என்பவர் ராமநாதபுரத்துக்கு பஸ் ஏறியுள்ளார்.

பஸ் ரொம்ப கூட்டமாக இருந்துள்ளது.. அதனால் நெரிசலில் நின்றபடியே வந்துள்ளார் குஞ்சரம்.. அந்த சமயத்தில்தான் 2 பெண்கள் பர்தா அணிந்து அங்கு நின்றிருந்தனர்.

இங்க வாங்க

இங்க வாங்க

குஞ்சரத்திடம், "ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க.. இப்படி வாங்க.. எங்க கிட்ட வந்து நில்லுங்க" என்று கூப்பிட்டுள்ளனர். அதனால், குஞ்சரம்மாவும் கொஞ்சம் தள்ளி வந்து 2 பெண்கள் நடுவில் நின்று கொண்டார்.. பிறகு ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் வராததுமாக 2 பெண்களும் அவசர அவசரமாக இறங்கினர்.

பஸ் ஸ்டாண்ட்

பஸ் ஸ்டாண்ட்

அப்போதுதான் 2 பெண்களும் குஞ்சரத்தின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்து கொண்டு இறங்கியது தெரிந்தது.. இதை பஸ்ஸில் இருந்த சிலரும் கவனித்து கூச்சல் போட்டனர். அதிர்ச்சி அடைந்த, குஞ்சரமும் உடனே கீழே இறங்கி அவர்களை பின்னாடியே துரத்தினார்.. கூச்சலிட்டுக் கொண்டே ரோட்டில் ஓடினார்.

ஒப்படைப்பு

ஒப்படைப்பு

மற்ற பயணிகளும் பின்னாடியே 2 பெண்களை துரத்தி ஓடி 2 பெண்களையும் கப்பென பிடித்து கேணிக்கரை போலீஸார் ஒப்படைத்தனர். அப்போதுதான் 2 பேருமே முஸ்லிம் பெண்கள் இல்லை என்பதும், பர்தாவை போட்டுக் கொண்டு இப்படி களவாணித்தனத்தில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் தெரியவந்தது.

விசாரணை

விசாரணை

2 பேருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். செல்வி, இசக்கியம்மாள் என்பது அவர்களின் பெயர்... கூட்டமான பஸ்ஸில் ஏறி நகை, பணத்தை ஆட்டைய போடுபவர்கள் என்பதும் தெரியவந்தது.. இதையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

English summary
two women arrested for 3 sovereign chain theft in running bus near ramnad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X