ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூத் கமிட்டி உறுப்பினர்களாக பெண்கள்... ராமநாதபுரத்தில் அதிமுகவின் அனல் பறக்கும் தேர்தல் பணிகள்..!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பூத் வாரியாக 25 பெண்கள் கொண்ட ஒரு குழுவை நியமிப்பதுடன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையிலும் தேர்தல் பணிகளுக்காக குழு உருவாக்கப்படுகிறது.

இந்தப் பணிகளை அதிமுக மகளிரணி மாநில இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னின்று மேற்கொண்டு வருகிறார்.

ஹஜ் பயணிகள் கவனத்திற்கு.. ஏஜென்ட்களிடம் பணம் எதுவும் கட்டாதீர்.. ஹஜ் கமிட்டி தலைவர் அறிவுறுத்தல்..!ஹஜ் பயணிகள் கவனத்திற்கு.. ஏஜென்ட்களிடம் பணம் எதுவும் கட்டாதீர்.. ஹஜ் கமிட்டி தலைவர் அறிவுறுத்தல்..!

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.

அதிமுக சார்பில் 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்களை பூத் கமிட்டி உறுப்பினர்களாக அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இம்மாத இறுதிக்குள் இந்தப் பணிகளை செய்து முடிக்க அதிமுக தலைமை கெடு விதித்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் சூடுபிடித்துள்ளது.

கீர்த்திகா முனியசாமி

கீர்த்திகா முனியசாமி

அதிமுக மகளிரணி மாநில இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி கடந்த 10 நாட்களாக கிராமம் கிராமமாக சென்று பூத் கமிட்டிக்கான மகளிர் குழுவை உருவாக்கி வருகிறார். அவர்களுக்கு புத்தாண்டுக்கான காலண்டர் உள்ளிட்ட பரிசுப் பொருட்களையும் கொடுத்து இப்போதே அதிமுகவுக்கான அடித்தளத்தை கிராமங்களில் வலிமைப்படுத்தி வருகிறார்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர்

பெண்கள் மத்தியில் பேசும்போது, உங்கள் கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை இரட்டை இலை சின்னத்துக்கு தான் வாக்களிக்க சொல்ல வேண்டும் அவ்வாறு வாக்களிக்க சொல்வீர்களா எனக் கேட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களிடம் உறுதியும் வாங்கிக் கொள்கிறார். இதனிடையே முதுகுளத்தூர் தொகுதியில் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுவார் எனக் கூறப்படும் நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே பரபரப்பாக காணப்படுகிறது.

பணிகள் நிறைவு

பணிகள் நிறைவு

கடந்த கால தேர்தல்களில் இல்லாத வகையில் இந்த தேர்தலுக்கு அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களாக பெண்கள் நியமனம் செய்யப்படுவது புது முயற்சியாக கருதப்படுகிறது. இதனிடையே சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளான கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, பனைகுளம், வாலிநோக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பெண்களை உறுப்பினர்களாக கொண்ட பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் முடிவடையவுள்ளன.

English summary
Admk appointed Womens as Booth Committee Members
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X