ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீசப்பட்டதா.. தலையில் காயமடைந்ததாக பரபரப்பு

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

பரமக்குடி: ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பெரிய ஆளாக வலம் வந்தவர் நயினார் நாகேந்திரன். அன்று ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன்.

பின்னர் ஜெ. மறைவுக்குப் பிறகு கட்சி உடைய.. எந்தக் கட்சிக்கு போகலாம் என்று நினைத்து கொண்டிருந்தபோது, பாஜக தானாக வந்து இவரை அழைத்து கொண்டு சென்றுவிட்டது. அப்போதே ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லியதாக தெரிகிறது. ஆனால் அதற்கான சூழல் இல்லை என்பதாலும், ராமநாதபுரத்தில் அதிமுக கோஷ்டி சண்டையாலும், இந்த முறை வேட்பாளராக களமிறங்கி உள்ளார் நயினார்.

வைரமுத்து

வைரமுத்து

அதிமுகவில் அமைதி போக்கை கடைப்பிடித்து வந்த நயினார், பாஜகவில் இணைந்தபிறகு கொஞ்சம் ஓவராகவே பேசினார். குறிப்பாக, வைரமுத்து விவகாரத்தில், "இந்துக்களை விமர்சித்தால் கொலையும் செய்யலாம்" என வன்முறையை தூண்டும் விதமாக பேசி அவர் மீது கேஸ் புக் ஆனதுதான் மிச்சம்!

கூட்டணி

கூட்டணி

எளிதாக ஜெயிக்க வேண்டிய ராமநாதபுரத்தை நயினாருக்கு கொடுத்துவிடும், அதிமுக தொண்டர்கள் கடும் கொதிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் எதிர்ப்பினையும் தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் கோஷ்டி பூசல் தலைதூக்கியே உள்ளது. இது எல்லாம் சேர்ந்து நயினார் நாகேந்திரன் இப்போது எங்கு சென்று பிரச்சாரம் செய்தாலும், அங்கு எதிர்ப்புகள் பிரதிபலித்தே வருகிறது.

நிர்வாகி காயம்

நிர்வாகி காயம்

கடந்த 1-ம் தேதியும் பெரிய பட்டினத்தில் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, யாரோ மாடியில் இருந்து பாட்டில் வீசினர். அது குறி தவறி நயினார் அருகில் இருந்த அதிமுக நிர்வாகி தலையில் விழுந்து அவர் காயம் அடைந்தார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்நிலையில், நேற்றும்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. திருப்பாலைக்குடி அருகே மணக்குடி பகுதியில் நயினார் நாகேந்திரன் வாக்குக் கேட்டு சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்கள் மீது கற்களை வீசினர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்நிலையில், நேற்றும்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. திருப்பாலைக்குடி அருகே மணக்குடி பகுதியில் நயினார் நாகேந்திரன் வாக்குக் கேட்டு சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்கள் மீது கற்களை வீசினர்.

கல்வீச்சு

கல்வீச்சு

இதில் நயினார் நாகேந்திரனுக்கு காயம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று பாஜக நினைத்து மறைப்பதாகவும் தெரிகிறது. இருந்தாலும் கல்வீச்சுக்கு காரணமாக இருந்த ஒருவரை போலீசார் பிடித்து சென்றதாகவும், அவர் மீது வழக்கு பதிய வேண்டாம் என்று பாஜக கேட்டு கொண்டதால் அவரை விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இதனிடையே தேர்தல் அதிகாரி சற்குணம் கொடுத்த புகாரின் பேரில், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சில கட்சி நிர்வாகிகள் மீது திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரச்சாரத்தின்போது நயினார் மீது நடத்தப்பட்ட மோதல் காட்சிகள் வாட்ஸ்அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

English summary
Bottle throw Ramnad BJP Candidate Nainar Nagendran and injured during campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X