ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீச்சு.. அதிமுக நிர்வாகி காயம்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்த நயினார் நாகேந்திரன் ஜெயலலிதா மறைந்த பிறகு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு ராமநாதபுரம் எம்பி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Bottle thrown on Nainar Nagendran in Ramanathapuram

இந்த நிலையில் அதிமுகவுடன் இணைந்து பாஜக லோக்சபா தேர்தலை தமிழகத்தில் சந்திக்கிறது. இதையடுத்து பெரியபட்டினத்தில் அதிமுக, பாமக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்.. புதுவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சுவாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம்.. புதுவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

அப்போது அவர் மீது பாட்டில் ஒன்று வீசப்பட்டது. அந்த பாட்டில் அருகில் இருந்த திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக நிர்வாகி உடையத்தேவர் மீது பாட்டில் பட்டது.

இதில் காயமடைந்த உடையத்தேவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தஞ்சை ஒரத்தநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது காலணி வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Unknown assailant throws bottle on Nainar Nagendran who contest in Ramanathapuram MP constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X