ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகள்.. பேய் பிடித்ததாக நம்பி பேயோட்டும் பூஜை.. உயிரைவிட்ட தாரணி!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உடல் நிலை சரியில்லாத மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் தாக்கியதில்; கல்லூரி மாணவி பரிதாமாக உயிரிழந்தார். மூட நம்பிக்கையால் மாணவி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ராமநாதபுரம்: மூட நம்பிக்கையின் உச்சம்… பேய் விரட்டுதல்… சரமாரி சாட்டையடி… கல்லூரி மாணவி மரணம்!

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது கோரவள்ளி கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலனோர் வெளி நாடுகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். எஞ்சியுள்ளவர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த வீர செல்வம்; வெளிநாட்டில் வேலை செய்து விட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பி தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கோபிநாத் என்ற மகனும்,தாரணி என்கின்ற மகளும் உண்டு. இவரது மனைவி கவிதா 9 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து இநறந்துவிட்டார்.

    மகள்

    மகள்

    வீர செல்வம் மகள் தாரணி கீழக்கரை தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் வீட்டில் ஆடு, மாடு, நாய் இறந்தது, இதற்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த மனைவி கவிதா தான் காரணம் என சிலர் கூறியுள்ளனர். இதனிடையே கவிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று வந்த தாரணிக்கு காய்ச்சல் வந்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தாய் பேய்

    தாய் பேய்

    கவிதாதான் பேயாக பிடித்ததாக சிலர் தந்தை வீர செல்வத்திடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வீர செல்வம் தனது மகள் தாரணியை தேவிபட்டிணம் அடுத்த திருப்பாலைக்குடி உள்ள கோடாங்கயிடம் அழைத்து சென்று பேய் ஓட்டும் பூஜை செய்துள்ளார். ஆனால், தாரணிக்கு உடல் நிலை சரியாகவில்லை.

    பேயோடும் பூஜை

    பேயோடும் பூஜை

    அதன் பின்னர் ராமநாதபுரம் அருகே வாணி என்கின்ற ஊரில் உள்ள பெண் பூசாரியிடம் அழைத்துச் சென்றனர். அங்கு பேயோட்டும் பூஜையில் சாட்டை, சிறு குச்சியால் (பெரம்பு) தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் தாக்கியதில் காயம் ஏற்பட்டு தாரணி மயக்கமடைந்தார். பின்னர் மிளகாய் வத்தலை தீயில் சுட்டு தாரணி மூக்கில் வைத்தும் மயக்கம் தெளியவில்லை. இதனால் பயற்து போன பெண் பூசாரி தாரணியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

    தாரணி

    தாரணி

    இதனையடுத்தது தந்தை வீர செல்வம் தாரணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் சிகிச்சை அளித்து ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் தாரணிக்கு டைபாய்ட் (TYPHOID) காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் வீர செல்வம் மீண்டும் ஒரு முறை பேய் ஓட்டுபவர்களிடம் அழைத்து சென்றால் உடல் நிலை சரியாகிவிடும் என கூறி வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    தாரணிக்கு மீண்டும் காய்ச்சல்

    தாரணிக்கு மீண்டும் காய்ச்சல்

    அன்று நள்ளிரவே தாரணிக்கு மீண்டும் கடுமையாக காய்ச்சல் ஏற்பட்டதால் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு தரணி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாணவி இறப்பில் மர்ம உள்ளதாக வழக்கு பதிவு செய்த உச்சிப்புளி போலீசார் தாரணியின் தந்தை, சகோதரர், திருப்பாலைக்குடி பூசாரி மற்றும் வாணியை சேர்ந்த பெண் பேயோட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    College girl died of Typhoid fever, but her father belived that she wasaffected by her mother's soul.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X