• search
ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முருகவள்ளிக்கு எப்ப பார்த்தாலும் அதன்மேல்தான் ஆசை.. வெறுத்து போன கணவர்.. கடைசியில் கொலை!

|

ராமநாதபுரம்: உடம்பு கச்சிதமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று முருகவள்ளிக்கு ஆசை.. அதனால் ஓட்காவுக்கு அடிமையாகி, கட்டின கணவனை கொல்லவும் துணிந்துள்ளார் முருகவள்ளி.. அழகுக்கு ஆசைப்பட்ட நிலையில், இன்று அது தன் உயிரையே காவு வாங்கிவிட்டது!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகராஜ்.. இவரது மனைவி முருகவள்ளி.. இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்... 2 குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடியில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று முருகவள்ளி பெட்ரூமில் பிணமாக கிடந்தார்.. ஆனால் வீட்டில் யாருமே இல்லை. கட்டில் மீது படுக்கையில் மட்டும் சடலம் கிடந்தது.

ஒரே ஒரு கிராமத்திலே.. ஒரு அப்பாவுக்கு 5 குழந்தைகள்.. 4 வருடத்தில் நடந்த விபரீதம்.. திகிலில் ஹரியானா!

சண்முகராஜ்

சண்முகராஜ்

இந்த தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர்.. குடும்பமே தலைமறைவானதால், சண்முகராஜ் மீது சந்தேகம் வலுத்தது. முருகவள்ளி கழுத்தில் காயங்களும் கிடந்தன. அதனால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பார் என்ற சந்தேகம் வலுத்தது.

 தலைமறைவு

தலைமறைவு

ஆனால் சண்முகராஜ் இந்த லாக்டவுனில் எங்கு போயிருக்க முடியும்? எப்படி தப்பி சென்றிருக்க முடியும்? என்பதால் போலீசார் துரிதமான தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், பஸ் இல்லாவிட்டாலும் நடந்தாவது ஊர் போய் சேர்ந்துவிடலாம் என்று நினைத்து பதுங்கி கொண்டிருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

மனைவியை தான் தான் கழுத்து நெரித்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். இது குறித்து அவர் சொல்லும்போது, "எங்க குடும்பம் நல்லாதான் போய்ட்டு இருந்தது.. லாக்டவுன் போட்டுவிடவும் வீட்டிலேயே முடங்கிட்டேன்.. அப்பதான் என் மனைவிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தது.. அவளுக்கு பக்கத்து வீட்டில் இருக்கிற 2 பெண்களுடன் நெருங்கி பழகினர்.

 குடிப்பழக்கம்

குடிப்பழக்கம்

தோழிகள் இப்படிதான் பொழுதை போக்க பேசி கொண்டு இருப்பார்கள் என்று நினைத்து எதுவும் கண்டுகொள்ளவில்லை.. ஆனால் அவர்கள் 2 பேரும்தான் என் மனைவிக்கு குடிப்பழக்கத்தை கற்று தந்துள்ளனர்.. "நீ அழகா இருக்கணும்னா ஓட்கா சாப்பிடு" என்று சொல்லி இருக்கிறார்கள்.. அழகுக்கு ஆசைப்பட்ட முருகவள்ளி எப்ப பாரு ஓட்கா சாப்பிட தொடங்கினார்.. அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.

 பண தட்டுப்பாடு

பண தட்டுப்பாடு

கையில் காசு இல்லாமல், வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும்போதுதான், முருகவள்ளி நடவடிக்கை அப்பட்டமாக தெரியவந்தது.. நான் குடித்துவிட்டு போதையில் விழுந்தபிறகு என் சட்டையில் இருந்து பணத்தை எடுத்து தோழிகளுடன் சேர்ந்து ஓட்கா வாங்கி குடித்தாள் முருகவள்ளி. இதனால் குடும்பத்தில் பண தட்டுப்பாடு வந்துவிட்டது.

 குடிகார மனைவி

குடிகார மனைவி

கையில் பணம் இல்லாமல் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.. அப்போதுதான் அக்கம்பக்கத்தில் கடன் கேட்கலாம் என்று நான் முயன்றபோது, அங்கெல்லாம் முருகவள்ளி ஏற்கனவே பணத்தை கடனகா வாங்கி குடித்து வைத்திருக்கிறாள் என தெரியவந்தது. இதையெல்லாம் தெரிந்து ஷாக் ஆயிட்டேன்.. மனைவியை கண்டித்தேன்.. ஆனால், குடிக்க பணம் தராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று என்னை மிரட்டினாள் முருகவள்ளி

 கொலை

கொலை

சம்பவத்தன்றும், ஓட்கா அடித்துவிட்டு மட்டையாகி கிடந்தபோது,தான் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்.. இப்படியே போனால் குடும்பத்துக்கு பிரச்சனை, குழந்தைகளுக்கு ஆபத்து.. என் உயிருக்கும் ஆபத்து.. அதனால்தான் கொன்றேன்" என வாக்குமூலம் தந்துள்ளார். தொடர் விசாரணை சண்முகராஜிடம் நடந்து வருகிறது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆசை ஆசையாக காதலித்து, கல்யாணம் செய்து, இன்று அந்த குழந்தைகள் அநாதையாக இருக்கிறார்கள்.. மதுக்கடைகள் வேணாம் என்று போராட்டம் செய்து, கடைகளையே மூட வைத்து அதிகாரிகளை ஓட வைக்கும் பெண்களை கண்ட தமிழகத்தில், இப்படியும் ஒரு பெண்ணா என்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
crime: husband killed wife near thoothukudi due to family issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X