ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல்.. 7 மாவட்டங்களுக்கு புயல் அலெர்ட் | ஆந்திரத்துக்கு ரெட் அலர்ட் வாபஸ்- வீடியோ

    பாம்பன்: கஜா புயல் நவம்பர் 15ம் தேதி பாம்பன் அருகே கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கக்கடல் பகுதியில் உருவான கஜா புயல் 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயலானது நவம்பர் 15ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Cyclone alert no 2 flagged of in Pamban port

    [கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. கடலோர காவல்படை கப்பல்கள் வருகை ]

    நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது கடல் சீற்றத்துடன் இருக்கும் என்றும் காற்று 90 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் நவம்பர் 13 முதல் நவம்பர் 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாம்பனில் 3வது நாளாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனிடையே புயல் நெருங்குவதை குறிக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    English summary
    Due to gaja cyclone alert no 2 flagged of at Pamban port, for the third day fishermen were not gone for fishing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X