ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாம்பன் அருகே நங்கூரமிட்ட புரேவி புயல்.. ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழை பதிவு

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: புரேவி புயல் மன்னார் பகுதியில் நிலை கொண்டிருப்பதால் ராமேஸ்வரத்தில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இலங்கையின் திருகோணமலை- பருத்தித் துறை இடையே முல்லைத் தீவு அருகே புரேவி புயல் கரையை கடந்தது. இலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவுக்குள் நுழைந்து பாம்பனை நெருங்கவுள்ளது.

இது இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்கவுள்ளது. தற்போது பாம்பனிலிருந்து 90 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.

புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும்? எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும் புரேவி புயல் தமிழகத்தில் எங்கு கரையை கடக்கும்? எங்கெங்கு அதிதீவிர கமழை பெய்யும்

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

இந்த புயலால் தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை அருகே புயல் கரையை கடந்த போது நேற்றைய தினம் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அது போல் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

பள்ளமோர்குளம்

பள்ளமோர்குளம்

நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் 120 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதாவது ராமநாதபுரத்தில் 33.50 மி.மீ மழையும் மண்டபம் பகுதியில் 58 மி.மீ. மழையும் பள்ளமோர்குளம் பகுதியில் 13 மி.மீ. மழையும் பெய்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

பின்னர் தங்கச்சிமடத்தில் 85.மி.மீ. மழையும் ராமேஸ்வரத்தில் 120.20 மி.மீ. மழையும் பாம்பனில் 62 மி.மீ. மழையும் பெய்தது. திருவாடானையில் 34 மி.மீ.மழையும் தொண்டியில் 41.50 மி.மீ. மழையும் பரமக்குடியில் 31.60 மி.மீ. மழையும் கமுதியில் 22.80 மி.மீ. மழையும் என ராமநாதபுரத்தில் மொத்தம் 746.30 மி.மீ. மழை பெய்துள்ளது.

குமரியில்

குமரியில்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியாக 46.64 மி.மீம மழை பெய்துள்ளது. அது போல் முதுகுளத்தில் அதிகபட்சமாக 105 மி.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரியில் சராசரியாக 1.1 மி.மீ மழை பெய்தது. சுருளகோடு பகுதியில் அதிகபட்சமாக 4.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று மதியம் முதல் தென் கடலோர மாவட்டங்களில் புரேவி புயலின் தாக்கம் இருக்கும். அதன் பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நகரும்.

English summary
Cyclone Burevi : Rameswaram records 120 mm rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X