ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாம்பனில் இருந்து 470 கிமீ தொலைவில் புரேவி-.30கிமீ வேகத்தில் சூறாவளி, மழை- 7ம் எண் புயல் கூண்டு

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: பாம்பனில் இருந்து வங்க கடலில் 470 கி.மீ. தொலைவில் புரேவி புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்க கடலில் இலங்கையின் திருகோணமலையை நெருங்கி வருகிறது புரேவி புயல். திருகோணமலைக்கு கிழக்கு தென்கிழக்கில் 240 கி.மீ. தொலைவில் புரேவி புயல் நகர்ந்து வருகிறது.

Cyclonic Storm Burevi about 470 Km east-southeast of Pamban

இது தமிழகத்தின் பாம்பனில் இருந்து 470 கி.மீ. தொலைவாகும். கன்னியாகுமரியில் இருந்து 650 கி.மீ. தொலைவு. பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷமாக சீறுகின்றன.

பாம்பனில் 30 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்துவருகிறது. இதனையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 50,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

நாடு விட்டு நாடு ...இலங்கையில் இன்று மாலை புரேவி புயல் கரையை கடந்து தமிழகம் நோக்கி நகரும்!நாடு விட்டு நாடு ...இலங்கையில் இன்று மாலை புரேவி புயல் கரையை கடந்து தமிழகம் நோக்கி நகரும்!

மேலும் புரேவி புயல் அடுத்த 5 மணிநேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary
Cyclonic Storm Burevi over southwest Bay of Bengal about 240 km east-southeast of Trincomalee (Sri Lanka), 470 km east-southeast of Pamban (India) and 650 km nearly east-northeast of Kanniyakumari (India).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X