ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாம்பனை நெருங்கிய புரேவி புயல்- பல மாவட்டங்களில் கனமழை- இன்று இரவு அல்லது அதிகாலை கரையை கடக்கிறது

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: இலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவுக்குள் நுழைந்து இன்னும் சில மணிநேரங்களில் பாம்பனை நெருங்க உள்ளது. இந்த புரேவி புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்க உள்ளது.

Recommended Video

    Burevi Cyclone நிலை என்ன? | Oneindia Tamil

    இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் புரேவி மையல் மையம் கொண்டிருந்தது. இப்புயல் இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு 8.40 மணியளவில் கரையை கடக்க தொடங்கியது.

    Cyclonic Storm Burevi lay center 180 Km from Pamban

    பல மணிநேரங்களாக இலங்கையில் கரையை கடந்த புரேவி புயல் மன்னார் வளைகுடாவில் நுழைந்தது. தற்போது இந்த புயல் தமிழ்நாட்டின் பாம்பன் துறைமுகத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 180 கி.மீ. தொலைவில் உள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் பாம்பனை மிகவும் நெருங்கி வந்துவிடும் புரேவி புயல்.

    நெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி நெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி

    இதனால் பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புரேவி புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையை கடக்க உள்ளது. புரேவி புயல் தாக்கத்தால் தென் தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் இடி மின்னலுடன் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.

    Cyclonic Storm Burevi lay center 180 Km from Pamban

    தென் தமிழகத்தில் புரேவி புயலை எதிர்கொள்ள முழு வீச்சில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று இரவு கேட்டறிந்தார்.

    English summary
    The Cyclonic Storm Burevi over Sri Lanka moved west-northwestwards with a speed of 12 kmph during past six hours and lay centered 180 km east-southeast of Pamban.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X