ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேவர் ஜெயந்தி, குருபூஜை.. முதல்வர், துணை முதல்வர் பசும்பொன்னில் அஞ்சலி

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வர், துணை முதல்வர் பசும்பொன்னில் அஞ்சலி-வீடியோ

    ராமநாதபுரம்: முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    சுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சித் தலைவருமான முத்துராமலிங்கத் தேவர் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குரு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் இருக்கும் தேவர் நினைவிடத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது.

    [திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த செகன்ட்... "இதுதான் நடக்கும்"... ஸ்டாலின் ஆவேச பேச்சு]

    தேவர் சிலை

    தேவர் சிலை

    விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் ஆன்மீக விழா, அதிகாலை 5.15 மணிக்கு யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று அரசியல் விழாவ நடைபெற்றது. இன்று அரசு விழாவாக நடைபெற்ற நிலையில் பசும்பொன்னுக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் அஞ்சலி

    ஸ்டாலின் அஞ்சலி

    முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வரும் துணை முதல்வரும் அஞ்சலி செலுத்தினர். அதுபோல் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    ஆளில்லா விமானம்

    ஆளில்லா விமானம்

    இந்த விழாவையொட்டி இதையொட்டி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமான கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் செயல் விளக்கம், தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது.

    கண்காணிப்பு

    கண்காணிப்பு

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசும்பொன், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

    English summary
    Muthuramalinga devar jayanti is being observed in Pasumpon. Cm Edappadi Palanisamy and Deputy CM O.Panneer selvam paid tribute to Devar statue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X