ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனுஷ்கோடியை வாரி சுருட்டிய கடல் கொந்தளிப்பு.. இன்றுடன் 56 ஆண்டுகள் நிறைவு.. காட்சிகள் மாறாத சோகம்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: துறைமுக நகரம் என அழைக்கப்பட்டு வந்த தனுஷ்கோடி ஒரே நாள் இரவில் அழிந்த சம்பவம் நடந்து இன்றோடு 56 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தீவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. ராமேஸ்வரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக இருந்தது.

வங்கக் கடலும் இந்திய பெருங்கடலும் கூடுமிடம் தனுஷ்கோடி கடலாகும். இங்கு குளித்தால் காசி யாத்திரை முடிவுறுவதாக ஐதீகம். வில்லை போன்று வளைந்து காணப்படும் கடற்கரையால் இதற்கு தனுஷ்கோடி என பெயரிடப்பட்டது. தனுஷ் என்றால் வில், கோடி என்றால் வானை தொடும் முனையாகும்.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா - முதல்வர் பழனிசாமி டிச. 28ல் ஆலோசனை இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனா - முதல்வர் பழனிசாமி டிச. 28ல் ஆலோசனை

யாத்திரை தலம்

யாத்திரை தலம்

சிறந்த துறைமுக நகரம், யாத்திரை தலம் என பல்வேறு பெருமைகளை கொண்ட நகரம் இதுவாகும். இங்கு 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற சோக சம்பவம் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றது. அன்றைய தினம் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி என்ற நகரமே ஒரே நாள் இரவில் அழிந்து போனது.

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அப்பகுதி மக்களை பெரிய பெரிய அலைகள் அப்படியே வாரி தூக்கி சென்று கடலில் மூழ்கடித்தது. இந்த சம்பவத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். தொடர் மழை. சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குதல் என அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்து கொண்டே இருந்தது.

கடலில் மூழ்கிய 120 பேர்

கடலில் மூழ்கிய 120 பேர்

இன்பச் சுற்றுலாவுக்காக ரயிலில் தனுஷ்கோடி வந்த 120 பேர் ரயில் தடம்புரண்டு கடலில் மூழ்கிவிட்டனர். கடல் நீர் ஊருக்குள் புகுந்து அந்த நகரையே அழித்துவிட்டது. இந்த துயர சம்பவங்கள் நிகழ்ந்து இன்றுடன் 56 ஆண்டுகள் முடிந்தன. எனினும் இதுவரை அந்த பகுதிக்கு மின்சாரம், மருத்துவ வசதி என எதுவும் இல்லை.

சிதிலமடைந்த பகுதி

சிதிலமடைந்த பகுதி

தனுஷ்கோடியின் சிதிலமடைந்த பகுதியை சுற்றுலா பயணிகள் கலக்கத்துடன் இன்றும் பார்வையிட்டு செல்கிறார்கள். இத்தனை பேய் மழை, கடல் கொந்தளிப்பிலும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முக்கிய பாலமான பாம்பன் மேம்பாலம் அசையால் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Dhanushkodi town devasted by a cyclone in 1964. On this today, this sad thing completed 56 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X