சுற்றுலா சென்ற 20 பேர்.. குறுக்கே நின்ற மரம் - ராமேஸ்வரம் அருகே விபத்தில் ஒருவர் பலி, 10 பேர் காயம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பனை மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் ராமேஸ்வரத்துக்கு வேனில் சுற்றுலா புறப்பட்டு உள்ளனர். ராமேஸ்வரம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே உள்ள பனை மரத்தில் வேன் மோதியது. இதில், வேன் ஓட்டுநர் நவநீதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் வேனில் பயணித்தவர்களை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் உதவி ஆய்வாளர் உயிரிழந்த ஓட்டுநர் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து உச்சிப்புளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.