மினிஸ்டர் சார்! சரக்கு ரூ 200க்கு விக்கிறாங்களே! கேட்க மாட்டீங்களா?.. கிராம சபையில் முதியவர் அதகளம்
ராமநாதபுரம்: சரக்கு (மது) பாட்டில் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள், அதை கேட்க முடியலையா என அமைச்சரை ஒரு நபர் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கிராமங்களில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பது குறித்து கேட்பதற்காக இந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும் கிராமங்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து கிராம மக்கள் முன் வைப்பர்.
இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊடுருவி மீன்பிடித்த 6 சிங்களர் கைது- சிறையில் அடைப்பு
இப்படிப்பட்ட கூட்டம் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில் தற்போது இந்த கூட்டமானது பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கூட்டம் இன்று நடந்தது.

கடலாடி
கடலாடி தாலுகா காவாகுளம் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் மக்கள் காத்திருந்தனர்.

கிராம சபை கூட்டம்
அப்போது அமைச்சர் கிராம சபை கூட்டத்தின்அவசியம் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஒரு முதியவர் எழுந்தார். அவர் ஏதோ கிராமம் தொடர்பான கோரிக்கையை முன் வைக்கிறாரோ என்பதால் அமைச்சரும் ஆவலாக என்ன ஐயா சொல்லுங்கள் என்றார்.

சரக்கு பாட்டில்
உடனே அந்த முதியவர் சரக்கு பாட்டில் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதை கேட்க முடியலையா என்று கேட்க அடுத்து பேசுவதற்குள் போலீசார் அவரை அங்கிருந்து அகற்றினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சிலர் அந்த முதியவரின் கேள்விக்கு சிரித்து விட்டனர். சிலர் காய்கறி விலை கூடிபோச்சு, பெட்ரோல் டீசல் விலையும் எகிறுது, அதை விட்டு விட்டு சரக்கு விலையை பற்றி சொல்றாரோ என தலையில் அடித்துக் கொண்டனர்.

பழைய பள்ளி கட்டடங்கள்
இதையடுத்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் முதுகுளத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் விரைவில் தொடங்க உள்ளது. மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும், காவாகுளம் பழைய பள்ளி கட்டடங்கள் இடித்து புதிதாக கட்டி தரப்படும் என விழாவில் அமைச்சர் பேசினார்.