ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பே இல்லை.. முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பே இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில் நான் விவசாயிதான். திமுக தலைவர் ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென தெரியாது. வேளாண் மசோதாவில் விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்கள் இருந்ததால்தான் அந்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்தது.

அதிமுகவில் மீண்டும் புயலை கிளப்பிய எஸ்.ஆர்.பி... ஓ.பி.எஸ்.மகனோடு லடாய்.. வெடிக்கும் சர்ச்சை..! அதிமுகவில் மீண்டும் புயலை கிளப்பிய எஸ்.ஆர்.பி... ஓ.பி.எஸ்.மகனோடு லடாய்.. வெடிக்கும் சர்ச்சை..!

தேசியக் கொடி பறக்கும்

தேசியக் கொடி பறக்கும்

மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்த போது அதை எதிர்த்து பேசிய அதிமுக எம்பி எஸ் ஆர் பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்போம். கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கூறியுள்ளாரா. கோட்டையில் எப்போதும் தேசியக் கொடிதான் பறக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

அடுத்த 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியே தொடரும். சிறு, குறு நிறுவனங்கள் 100% இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

விடுதலை

விடுதலை

சசிகலா சிறையிலிருந்து விடுதலையானவுடன் அதிமுகவில் அவரை இணைத்துக் கொள்வீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இந்த கேள்விக்கு தகுதியான இடம் இது அல்ல என கூறி பதில் அளிக்க மறுத்துவிட்டார். வேளாண் சட்டத்தை மக்களவையில் அதிமுக ஆதரித்த நிலையில் மாநிலங்களவையில் எஸ்ஆர் பாலசுப்பிரமணியம் எதிர்த்து பேசியிருந்தார்.

ஓபிஎஸ் மகன்

ஓபிஎஸ் மகன்

இதுகுறித்து அவர் கூறுகையில் மக்களவையில் ஓபி ரவீந்திரநாத் வேளாண் சட்டத்தை ஆதரித்தது அவர் புதிய உறுப்பினர் என்பதால் இருக்கலாம். ஆனால் அவர் ஆதரித்ததால் நானும் மாநிலங்களவையில் ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பேட்டி

முதல்வர் பேட்டி

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பேது அவர் கூறுகையில் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பே இல்லை. தமிழக சட்டத்தை ஒட்டியே மத்திய அரசும் சட்டம் இயற்றி இருக்கிறது. தமிழக மக்கள் விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம். நான் ஒரு விவசாயி என்பதால் வேளாண் விவரங்கள் குறித்து எனக்கு நன்றாக தெரியும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

English summary
CM Edappadi Palanisamy says that we will ask explanation from ADMK MP S.R. Balasubramaniyan about Farm bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X