ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

EXCLUSIVE: பரமக்குடியை கலக்கிய "உள்ளே வெளியே" .. அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும் இதை பார்த்து

தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மணற்சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பரமக்குடி: ஓட்டுக்கு பணம் தர்றாங்க.. அதே பணத்தைதான் அப்பறம் லஞ்சமா அரசியல்வாதிகள் வாங்கிக்கிறாங்க.. இதுக்கு பெயர்தான் 'உள்ளே வெளியே' என்கிறார் மணற்சிற்பி சரவணன்!

பரமக்குடியில் வீதியில் அந்த மணற் சிற்பம் கண்ணை பறித்தபடியே இருந்தது. பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. இந்தியா வரைபடத்தில் ரோஸ் கலர், பச்சை கலர் என்று இருந்தது. ஆனால் ஒன்றும் விளங்கவில்லை. அதனால் இதை வரைந்தது யார் என்று விசாரிக்க "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக சென்றோம்.

இறுதியில் இந்த சிற்பத்தை வரைந்தது சரவணன் என்பதும், அவர் ஒரு மணல் சிற்பி என்பதும் தெரியவந்தது. வயது 39 ஆகிறது. பரமக்குடி அருகே கலையூர் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறாராம்.

 3 சிற்பங்கள்

3 சிற்பங்கள்

மணல் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளதால், கடந்த 2015-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 24 சிற்பங்களை செய்திருக்கிறராம். இப்போதும் தேர்தல் காலம் என்பதால், இதையொட்டி 3 சிற்பங்களை வடிவமைத்துள்ளதாகவும் சொல்கிறார். இந்த மணற்சிற்பத்தை பற்றி அவரே விவரிக்கிறார்:

 ஊழல்வாதிகள்

ஊழல்வாதிகள்

"நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல" இதுதான் நான் வரைய மேற்கொண்டிருக்கும் மணல் சிற்பத்தின் மெயின் தலைப்பு. அரசியல்வாதிகள் ஊழல் செய்து சம்பாதித்த மக்கள் பணத்தை தேர்தல் காலங்களில் ஓட்டுக்காக வாக்காளரிடம் லஞ்சமாக கொடுக்கிறார்கள். இதில் ஊழல் செய்து சம்பாதித்த பணம் அரசியல்வாதிகள் வீட்டுக்கு உள்ளே செல்கிறது. "இது உள்ளே"!

நாலாபக்கமும் ரவுண்டு கட்டி நிற்கும் சவால்கள்.. தர்மபுரியில் தர்மசங்கடத்தில் அன்புமணி நாலாபக்கமும் ரவுண்டு கட்டி நிற்கும் சவால்கள்.. தர்மபுரியில் தர்மசங்கடத்தில் அன்புமணி

 உள்ளே வெளியே

உள்ளே வெளியே

தேர்தல் காலங்களில் வாக்காளர்களிடம் இருந்து ஓட்டு பெறுவதற்காக அதே பணம் வெளியே லஞ்சமாக செல்கிறது. "இது வெளியே"! அதனால் இந்த சிற்பத்துக்கு " உள்ளே வெளியே" என்று பெயர் வைத்திருக்கிறேன்.

 ஓட்டுக்கு நோட்டு

ஓட்டுக்கு நோட்டு

இதில் ஓட்டு முத்திரை வரையப்பெற்று, அதன் மேலே "ரூபாய்" என்று எழுதி உள்ளேன். இந்த மொத்த உருவமும் அணுகுண்டு வடிவில் வடிவில் செய்யப்பட்டுள்ளது. அணுகுண்டு தீப்பற்றி திரியில் எரிகிறது. இதனால் "ஓட்டுக்கு நோட்டு சனநாயகத்திற்கு வேட்டு " என்று சிற்பத்தின் கீழே எழுதியிருக்கிறேன்.

 தன்னார்வலர்கள்

தன்னார்வலர்கள்

தேர்தலுக்கு முன்பாக பரமக்குடி, அரிச்சமுனை பகுதி உள்பட பல இடங்களில் மணல் சிற்பம் செய்ய உள்ளேன். எனது மணற் சிற்பங்களை பார்த்து பொதுமக்கள் மனசார பாராட்டி வருகிறார்கள் என்கிறார் சரவணன். இவரைப் போன்ற தன்னார்வலர்களை அரசு பாராட்டி கவுரவப்படுத்துவதுடன் அங்கீகாரம் அளித்தால் இன்னமும் ஆர்வமாக செயல்படுவார்கள் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

English summary
Election Awareness through Sand Dunes that "should not get the money" by Paramakudi Artist
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X