ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க என்ன அமைச்சரா...? முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த வாக்குவாதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை..எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

    ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் நிகழ்வில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மதுரையில் இருந்து கார் மூலம் நேற்று பசும்பொன் கிராமத்திற்கு முதல்வர் சென்ற போது ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு தான் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    முருகா காப்பாத்து.. பழனி கோவிலுக்கு அடுத்தடுத்து சென்ற துர்கா ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்முருகா காப்பாத்து.. பழனி கோவிலுக்கு அடுத்தடுத்து சென்ற துர்கா ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்த்

    முதல்வர் மரியாதை

    முதல்வர் மரியாதை

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்து கார் மூலம் பசும்பொன் சென்றார்.

    கொட்டிய மழை

    கொட்டிய மழை

    நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையிலும், அதிமுகவினர் கொட்டும் மழையில் நின்றவாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளித்தனர். அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் வரவேற்பு அளித்து அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    முதலமைச்சரை வரவேற்பதற்காக நின்ற வரிசையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பின்னுக்கு தள்ளிவிட்டு பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் முன் வரிசையில் நின்றுள்ளார். இதனால் கோபமான மணிகண்டன், நான் முன்னாள் அமைச்சர் எனக் கூறியுள்ளார். நீங்க இப்ப அமைச்சராக இருக்கிறீர்களா..இல்லையே..என்னை போன்று நீங்களும் ஒரு எம்.எல்.ஏ.தான் என சதன் பிரபாகர் பதில் அளித்துள்ளார்.

    மாவட்டச் செயலாளர்

    மாவட்டச் செயலாளர்

    இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக் கவனித்த மாவட்டச் செயலாளர் முனியசாமி அவர்கள் இருவரிடமும் முதல்வர் வரும் நேரத்தில் வாக்குவாதம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொண்டு சமாதானப்படுத்தினார்.

    உட்கட்சி விவகாரம்

    உட்கட்சி விவகாரம்

    ராமநாதபுரம் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மணிகண்டன் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது முதல் அவரது எதிரணியினர் வரிந்து கட்டிக்கொண்டு அவருக்கு எதிராக அரசியல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

    English summary
    ex minister manikandan anad admk mla sathan prabhakar arguing with Chief Minister's Event
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X