ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. லட்டர் எழுதி வைத்து விட்டு.. கிணற்றில் குதித்த பெண் ஊழியர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Gov transport Female worker committed suicide

    ராமநாதபுரம்: "ரொம்ப டார்ச்சர்.. என்னால முடியல.. என் சாவுக்கு காரணம் இவங்க 3 பேர்தான்" என்று போக்குவரத்து பணிமனை பெண் ஊழியர் ஒருவர் லட்டர் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம் அருகே போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் சக பெண் ஊழியர்கள் துன்புறுத்துவதாகக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம், காட்டூரணியை சேர்ந்தவர் ஷோபனா. புறநகர் போக்குவரத்து பணிமனையில் ஜுனியர் அஸிஸ்டெண்ட்டாக வேலை பார்த்தவர். இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டு பின்புறம், குடிநீருக்காக புதிதாகத் தோண்டப்பட்ட கிணற்றில் விழுந்து ஷோபனா தற்கொலை செய்துகொண்டார்.

    காதல் வெறி.. பள்ளிக்குள் புகுந்து.. கழுத்தில் கத்தியை வைத்து.. மாணவியை கடத்த முயன்ற இளைஞர்!காதல் வெறி.. பள்ளிக்குள் புகுந்து.. கழுத்தில் கத்தியை வைத்து.. மாணவியை கடத்த முயன்ற இளைஞர்!

    தற்கொலை

    தற்கொலை

    இதையடுத்து போலீசார், மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தரவும் விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். இந்த தற்கொலை சம்பந்தமான விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போது, தன்னுடைய தற்கொலைக்கான காரணத்தையும் ஷோபனா எழுதிவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    ஆபாசம்

    ஆபாசம்

    அந்த கடிதத்தில், "என்னுடன் வேலை பார்க்கும், சக ஊழியர்களான புவனேஸ்வரி, பானுமதி, கமலா ஆகியோர் என்னை டார்ச்சர் செய்கிறார்கள்.. அடிக்கடி தகராறும் செய்து வந்தனர். பிற பணியாளர்கள் முன்னாடியே என்னை அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசினார்கள்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இதை பற்றி மேலதிகாரிகளிடம் புகார் சொன்னேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை போல நிலைமை வேற யாருக்குமே நடக்க கூடாது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் எழுதி கோரிக்கை வைத்து உள்ளார் ஷோபனா.

    ஏடிஎம் நம்பர்

    ஏடிஎம் நம்பர்

    மேலும், தன்னுடைய ஏடிஎம் பின் நம்பர், தன்னுடைய நகைகள் எங்கே இருக்கின்றன என்ற விவரங்களை எல்லாம் அதில் தெரிவித்து, தன்னுடைய மகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்றும் உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, கடிதத்தின் அடிப்படையில் பெண் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    English summary
    Gov transport Female worker committed suicide near Ramnad due to higher officials torture
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X