ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் எஸ்பிபிக்கு மலர்தூவி அஞ்சலி!!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னையில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக கடந்த 4ஆம் தேதி அவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார். அவருக்கு கொரோனா நெகடிவ் என்று வந்து இருந்தது.

Flower Tribute to SPB at Rameswaram Sea

ஆனால், கொரோனா தொற்று நீங்கினாலும், நுரையீரல் தொற்று அதிகரித்தது. இதைத் தொடர்ந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்தன. ஆனால், இவற்றில் இருந்து எல்லாம் சிறிது சிறிதாக தேறி வந்தார். பேசுவதற்கும், எழுதுவதற்கும் முயற்சித்தார். உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. இவர் தேறி வருவார் என்று உலகமே காத்திருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நண்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். இது உலகம் முழுவதும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது உருவப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினர்.

English summary
Flower Tribute to SPB at Rameswaram Sea
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X