ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக வேண்டாம்னே... இங்க இருங்க பார்த்துக்கலாம்... முன்னாள் அமைச்சரின் மனதை கரைத்த அதிமுக மா.செ..!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையவிருந்த முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜனை சமாதானம் பேசி கட்சியில் தக்க வைத்திருக்கிறார் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி.

கடந்த 2011-2016 இடையே ஜெயலலிதா அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சுந்தர்ராஜன். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இவர், 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

former admk minister Sundarajan did not join dmk

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி, சுந்தர்ராஜன் ஆகியோரெல்லாம் ஒரே சீனியாரிட்டி உடையவர்கள். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைவதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தார் சுந்தர்ராஜன். காரணம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பரமக்குடி இடைத்தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் சதன் பிரபாகர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

இதனால் கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்த அவரை திமுக தரப்பு அழைப்பு விடுத்தது. இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி நேரடியாக சுந்தர்ராஜனை சந்தித்து தொடர்ந்து அதிமுகவில் தக்க வைத்துவிட்டார். மன மாச்சரியங்களை கடந்து, சுந்தர்ராஜனை நேரில் சந்தித்த முனியசாமி உங்களுக்கு என்ன குறைன்னு சொல்லுங்க பார்த்துக்கலாம், அதற்கென்று நீங்கள் திமுகவுக்கெல்லாம் போக வேண்டாம்னே என தனது பாசத்தால் சுந்தர்ராஜனை கட்டிப்போட்டுவிட்டார்.

அதிகாரிகளே வெட்கப்படுங்கள், தியாகி பென்ஷன்- 99 வயது முதியவரை 23 வருசம் அலையவிட்டதால் கொதித்த நீதிபதிஅதிகாரிகளே வெட்கப்படுங்கள், தியாகி பென்ஷன்- 99 வயது முதியவரை 23 வருசம் அலையவிட்டதால் கொதித்த நீதிபதி

சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் கட்சியில் இருந்து ஒருவர் கூட எதற்காகவும் விலகக்கூடாது என நினைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதன் காரணமாகவே முனியசாமி மூலம் சுந்தர்ராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் இ.பி.எஸ். நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜனை திமுகவுக்கு அழைத்து வருவதாக தலைமையிடம் கூறிய ராமநாதபுரம் மாவட்ட திமுகச் செயலாளர் முத்துராமலிங்கம் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கிறார். சுந்தர்ராஜனை நம்பி அவசரப்பட்டு தலைமையிடம் வாக்கு கொடுத்துவிட்டோமே என அவர் தரப்பு புலம்பி வருகிறது.

English summary
former admk minister Sundarajan did not join dmk
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X