• search
ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பீச்சில் கதறிய இளம்பெண்.. "அண்ணா.. என்னை விட்டுடுங்க".. சுற்றி வளைத்த 3 பேர்.. அடுத்தடுத்த பயங்கரம்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடற்கரையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை தமிழகத்துக்கு ஏற்படுத்தி வருகிறது.

விருதுநகர் இளம்பெண் பாலியல் சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.. பட்டியலினத்தை சேர்ந்த அந்த பெண்ணை 8 பேர் நாசம் செய்துள்ளனர்,

2 பேர் திமுக நிர்வாகிகள்.. 4 பேர் மாணவர்கள்.. ஆபாச வீடியோவை காட்டி, அந்த பெண்ணை ஒதுக்குப்புறத்தில் சீரழித்ததே 17 வயதுக்கும் குறைவான இந்த பள்ளி சிறுவர்கள்தானாம்.. இதில் 2 பேர் 9-ம் வகுப்பு மாணவர்களாம்.

 அம்மாடி! வயாகரா கொடுத்தே இளம்பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்.. வயாகரா 'அது'க்கு மட்டும் இல்லையாம் அம்மாடி! வயாகரா கொடுத்தே இளம்பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்.. வயாகரா 'அது'க்கு மட்டும் இல்லையாம்

 சிறுவர்கள்

சிறுவர்கள்

அதேபோல, கடந்த 4 நாட்களுக்கு முன்பாக வேலூரில் ஒரு பெண் டாக்டர், நண்பருடன் நைட்ஷோ பார்த்துவிட்டு வரும்போது, நண்பரை தாக்கிவிட்டு பெண் மருத்துவரை கடத்தி சென்றுள்ளனர்.. கத்திமுனையில் மிரட்டி 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.. இதில் கொடுமை என்னவென்றால், பெண் டாக்டரை பலாத்காரம் செய்த அந்த 3 பேருமே சிறுவர்கள்தான்..!

 கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

இதுபோன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் உத்தரபிரதேசம், பீகார் போன்ற படிப்பறிவு குறைந்த வட மாநிலங்களில் மட்டுமே நடந்து வந்த நிலையில், நம்ம தமிழ்நாட்டிலும் வந்துவிட்டதா? என்ற கவலை நிறைந்த அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.. இப்போது இன்னொரு சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.. இந்த பெண்ணும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்தான்.. அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஆவார்.. இவர் ஹரிகிருஷ்ணன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

 பீச்சில் கொடூரம்

பீச்சில் கொடூரம்

சம்பவத்தன்று, ஹரிகிருஷ்ணனுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்... அப்போது, பீச்சில், யாருமே இல்லாத ஒரு இடத்தில் காதலர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. அந்த நேரத்தில் காதலர்களை 3 பேர் சுற்றிவளைத்துள்ளனர்... ஹரிகிருஷ்ணன், காதலியிடம் இருந்து நகை, பணத்தை பிடுங்கி உள்ளனர்.. பிறகு அந்த பெண்ணின் வளையல், மோதிரத்தை மிரட்டி பறித்து கொண்டனர்.. அதற்கு பிறகுதான் ஆள் அரவம் இல்லாததால், காதலனை கட்டிப்போட்டுவிட்டு, அவரது கண்முன்னேயே அந்த பெண்ணை 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர்.

 அண்ணா..

அண்ணா..

அவர்களிடம் இருந்து தன்னுடைய காதலியை மீட்க காதலன் போராடி உள்ளார்.. ஆனாலும், கொள்ளையர்கள் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.. எவ்வளவு கத்தியும் பீச் பகுதியில் ஆள்கள் இல்லாததால் உதவிக்கு யாருமின்றி காதலன் கதறி கொண்டே இருந்துள்ளார்.. அதேபோல அந்த பெண்ணும்.. "அண்ணா எங்களை விட்டுடுங்க.. நாங்க இந்தபக்கம் வரமாட்டோம்" என்று அவர்கள் காலில் விழுந்து கெஞ்சி கதறியதாக கூறப்படுகிறது...

 கும்பல்

கும்பல்

எதற்குமே மசியாத அந்த கும்பல், பலாத்காரம், கொள்ளை, தாக்குதல்களை முடித்துவிட்டு, இருவரையும் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இதனை பொறுத்து கொள்ள முடியாத, காதலன் ஹரிகிருஷ்ணன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. எனினும் அவரை காப்பாற்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது..

 அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை


இதற்கிடையே, தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டிஸ்பியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்... இதை தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.. இறுதியில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது... இதையடுத்து, அவர்களின் இருப்பிடத்தை போலீசார் சுற்றிவளைத்தனர்...

அரிவாள்

அரிவாள்

ஆனால், போலீசார் தங்களை பிடிக்க வருவதை பார்த்த 3 பேரும், போலீசாரையே அரிவாளால் வெட்டிவிட்டு, பைக்கில் ஏறி தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்... இதில் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணணுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், 3 பேரையும் போலீசார் தப்ப விடாமல், விரட்டிபிடித்து கைது செய்துவிட்டனர்... பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரத்தன்மையை காட்டி வரும் திமுக அரசு, தொடர்ந்து சாட்டையை சுழட்ட வேண்டிய அவசியம் மேலும் அதிகரித்துள்ளது..!

English summary
How did the 3 criminals get caught by the Ramnad police and what happened to the lovers 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடற்கரையில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை தமிழகத்துக்கு ஏற்படுத்தி வருகிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X