ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமநாதபுரம் தொகுதியில் எந்த பொத்தானை தொட்டாலும் தாமரைக்கே ஓட்டு.. நவாஸ்கனி பகீர்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: எந்த பொத்தானை அழுத்தினாலும், தாமரைக்கு வாக்கு பதிவாகிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி புகார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுகவின் கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்

If Touch Any button,the vote Automatically Goes for the lotus, candidate Navas Kani complained

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவைத் தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது.

மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து! மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து!

இந்நிலையில், ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் நவாஸ்கனி சாயல்குடியில் உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்டார். பின்னர், பேட்டியளித்த அவர், சிக்கல் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் எந்த சின்னத்தை தேர்வு செய்தாலும் அதில் தாமரை சின்னத்திற்கே வாக்கு பதிவதாக தெரிவித்தார்.

அதன் பின், தொடர்ந்து அதிகாரிகளிடம் முறையிட்டு கேட்ட பின் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்ததாகவும் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் வாக்குபதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

English summary
Ramanathapuram candidate Navas Kani complained That, If Touch Any button,the vote Automatically Goes for the lotus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X