ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை!

ராமநாதபுரத்தில் திமுக தோல்வியடைய என்ன காரணம் என தெரியவந்துள்ளதாம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பரமக்குடி தோல்வி!.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு- வீடியோ

    பரமக்குடி: ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு நடக்க போகுதாம். அதிலும் 3 பேரின் பெயர்கள் அடிபட்டு கொண்டே இருப்பதால், எப்போ என்ன மாதிரியான உத்தரவு திமுக தலைமையிடம் இருந்து வருமோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ராமநாதபுரத்தில் அதிமுகவே நேரடியாக இறங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் கோஷ்டி பூசலை பார்த்து தலைசுற்றி போன அதிமுக தலைமை, ராமநாதபுரத்தை கூட்டணி கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கி தந்துவிட்டது. இதில், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனி நிறுத்தப்பட்டார்.

    இவங்களும் இழுக்கறாங்க.. அவங்களும் இழுக்கறாங்க.. யார் பிளான் வெல்லப் போகுதோ! இவங்களும் இழுக்கறாங்க.. அவங்களும் இழுக்கறாங்க.. யார் பிளான் வெல்லப் போகுதோ!

     நவாஸ்கனி

    நவாஸ்கனி

    ஒட்டுமொத்த ராமநாதபுர எம்பி தேர்தலின் முடிவில், வெறும் பரமக்குடியை மட்டும் எடுத்து கொண்டால், நவாஸ்கனி 65,263 ஓட்டுக்கள் பெற்றார். நயினார் பாஜக 81 ஆயிரத்து 676 ஓட்டுக்கள் வாங்கினார்.

     சதன்பிரபாகரன்

    சதன்பிரபாகரன்

    இதே பரமக்குடியில் இடைத்தேர்தல் நடந்தது. அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதின. அதிமுக சார்பில் சதன் பிரபாகரனும், திமுக சார்பில் சம்பத் குமாரும் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன் 82 ஆயிரத்து 348 ஓட்டுக்கள் வாங்கினார். ஆனால் திமுக வேட்பாளர் சம்பத் குமார் 68 ஆயிரத்து 406 ஓட்டுக்களை வாங்கினார்.

     திமுக

    திமுக

    அதாவது, இடைத்தேர்தல் ஆகட்டும், எம்பி தேர்தல் ஆகட்டும், இரண்டிலுமே திமுக தோற்று போய்விட்டது. இதுதான் தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி பரமக்குடியில் திமுக மண்ணை கவ்வ என்ன காரணம் என்று பார்த்தால், அங்கேயும் உள்ளடி வேலை நடந்துள்ளதாம்.

     புகைச்சல்

    புகைச்சல்

    இடைத்தேர்தலில் போட்டியிட பரமக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் சீட் கேட்டார். அதேபோல, முன்னாள் எம்எல்ஏ திசைவீரனும் சீட் கேட்டார். இருவருமே சீனியர்கள். ஆனால் இவர்களுக்கு சீட் தராமல் 32 வயதான இளைஞர் சம்பத்குமாருக்கு சீட் தரப்பட்டது. இதுதான் பரமக்குடி திமுகவில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. யாரும் சரியாக இறங்கி வேலை பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

     ஐ பெரியசாமி

    ஐ பெரியசாமி

    அது மட்டுமில்லாமல், இங்கு திமுக தேர்தல் பொறுப்பாளராக ஐ பெரியசாமிதான் நியமிக்கப்பட்டிருந்தார். இவரும் களப்பணியில் இறங்கவில்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் ஏன் பரமக்குடியில் திமுக தோற்று போனது என்பது குறித்து கட்சி தலைமையிடம் சம்பத்குமார் புகார் அளிக்க உள்ளார். ஏற்கனவே தோற்ற கடுப்பில் உள்ள திமுக, இனி எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்க போகிறது என தெரியவில்லை. அதேசமயத்தில் ஐ பெரியசாமி மீதும் நடவடிக்கை பாயுமா என்பதும் சந்தேகமே! ஆனால் ராமநாதபுர திமுகவில் களையெடுப்பு கூடிய சீக்கரம் நடக்க போவதாக சொல்லப்படுகிறது.

    English summary
    Three Persons are reportedly responsible for DMK's defeat in Ramnad MP Election and Paramakudi by election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X