ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி

2019 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம் - அமைச்சர் மணிகண்டன்

    ராமநாதபுரம்: 2019 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    1954-ல் தமிழக முதல்வராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மாணவர்கள் படிக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம், பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகமானது. அதன் பின்னர் வந்த எம்ஜிஆர் உட்பட அனைத்து முதல்வர்களும் மதிய உணவு திட்டத்தை சிறப்பாக முன்னுக்கு கொண்டு சென்றனர்.

    January onwards steps to provide breakfast in schools

    இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், அரசின் திட்டங்களை ஏளனப்படுத்தி, வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்படும் படங்களை யாரும் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்று கூறினார்.

    மேலும், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் போன்று, 2019 ஜனவரி மாதம் முதல் காலை உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    மேலும் இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறினார்.

    English summary
    Minister manikantan said that steps are being taken to ensure breakfast in January 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X