ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போக்கிடமில்லாமல் அரசியலுக்கு வரவில்லை.. பரமக்குடியில் கமல்ஹாசன் பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: ஆற்றாமையினாலும் போக்கிடமில்லாததாலும் நான் அரசியலுக்கு வரவில்லை என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன் தனது 65 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இது தொடர்பாக விழா 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது குடும்பத்தினரை சந்தித்தார்.

இன்று அவரது தந்தை சீனிவாசனின் நினைவு தினம். இதையொட்டி தந்தையின் உருவச்சிலையையும் கமல் திறந்துவைத்தார்.

ஆன்ஸ்க்ரீன்.. ஆஃப்ஸ்க்ரீன்.. இரண்டிலுமே கமல் ஒரு தசாவதாரம் தான்!

தந்தை சிலை

தந்தை சிலை

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கமலுக்கு சொந்தமான இடத்தில் தந்தை சீனிவாசனின் மார்பளவு சிலையை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போக்கிடம்

போக்கிடம்

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கமல் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை. அது போல் ஆற்றாமையினாலும் அரசியலுக்கு வரவில்லை.

நம்பிக்கை

நம்பிக்கை

என்னால் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கையினால் அரசியலுக்கு வந்துள்ளேன். ஏழைகளுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்படும்.
கிட்டத்தட்ட இன்றும் ஒரு சுதந்திர போராட்டம் தேவைப்படுகிறது என்றார் கமல்.

ஜனாதிபதியாகனும்

ஜனாதிபதியாகனும்

தந்தை சிலை திறப்பு விழாவில் நடிகர் பிரபு, கமலின் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் பிரபு பேசுகையில் கமலை நாங்கள் ஜனாதிபதியாக பார்க்க ஆசை. என் தந்தை சிவாஜியின் கலையுலக வாரிசுதான் கமல் என்றார்.

English summary
Makkal Needhi Maiam President Kamal Hassan says that iam not coming to politics as i have no further opportunities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X