ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குக்கர் சின்னத்தை வாங்கியிருப்பது நாங்கள்தான்- அமைச்சர் மணிகண்டன் பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: குக்கர் சின்னத்தை வாங்கியிருப்பது நாங்கள்தான் என அமைச்சர் மணிகண்டன் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆங்காங்கே அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களும் அனலை கிளப்பியுள்ளன. இந்த நிலையில் ராமநாதரபுரத்தில் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் மணிகண்டன் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில், அமமுகவின் சின்னம் பரிசுப் பெட்டி அல்ல. அது சவப் பெட்டியாகும்.

டெல்லி, கோவா, ம.பியில் 60 இடங்களில் ஐடி ரெய்டு.. ம.பி முதல்வர் கமல்நாத் உதவியாளர் வீட்டிலும் சோதனை டெல்லி, கோவா, ம.பியில் 60 இடங்களில் ஐடி ரெய்டு.. ம.பி முதல்வர் கமல்நாத் உதவியாளர் வீட்டிலும் சோதனை

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

அமமுக என்னா பெயர் இது. ஆமை மூக்கன் கட்சிதான். ஆமை புகுந்த இடம் எங்கயாவது உருப்படுமா. சின்னமே இல்லாத கட்சி. குக்கர் சின்னத்தை நாங்கள்தான் வாங்கி வைத்துள்ளோம். அதற்கு ஒரு வேட்பாளரையும் நாங்கள்தான் போட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து குக்கர் சின்னத்தை தனக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நிரந்தரமாக முடியாது

நிரந்தரமாக முடியாது

ஆனால் தேர்தல் ஆணையமோ அது சுயேச்சைகளுக்கு வழங்கப்படும் சின்னம் என்பதால் அச்சின்னத்தை ஒரு கட்சிக்கு நிரந்தரமாக வழங்கமுடியாது என தெரிவித்து விட்டது.

தினகரன் கட்சி

தினகரன் கட்சி

அதற்கு பதிலாக பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது. அதே வேளையில் குக்கர் சின்னத்தை வேறு ஒரு சுயேச்சைக்கு வழங்கியுள்ளதால் தினகரன் கட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

English summary
Minister Manikandan says that there is no symbol for TTV Dinakaran party. That Cooker symbol also we are getting and placed one candidate also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X