ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் முகேஷ் அம்பானி.. சத்தம் போடாமல் விசிட்.. மகள் கல்யாண பத்திரிகையை வைத்து வழிபாடு

ராமேஸ்வரம் கோயிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்துக்கு சைலண்ட்டா வந்து போயிருக்கார் முகேஷ் அம்பானி. மகளின் கல்யாண பத்திரிகையை கோயிலில் வைத்து கும்பிட்டு போயிருக்கார்!!

நாம பணக்காரரா ஆகிறோமோ இல்லையோ? இந்தியாவின் பணக்காரர் யார் என்றால் அம்பானி பெயர்தான் வந்து விழும். இவரது மகளுக்கு வருகிற டிசம்பர் 12-ம் தி கல்யாணம் நடக்க உள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எல்லாம் விவிஐபிகள் கலந்து கொள்ள போகிறார்கள்.

கல்யாண பத்திரிகை பார்த்தே இந்திய மக்கள் வாயை பிளந்தார்கள். இப்படியெல்லாம் கூட இன்விடேஷன் போடலாம் என்று முகேஷ் அம்பானி என்னென்னவோ செய்து அசத்தினார். ஒரு கல்யாண பத்திரிகையின் விலையே ஒரு லட்சத்துக்கும் மேல என்கிறார்கள்.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

இந்நிலையில் பத்திரிகையை எடுத்து கொண்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தார். தனி ஹெலிகாப்டர்தான்.. ஸ்டிரைட்டா மண்டபத்துக்கே ஹெலிகாப்டர் வந்து நின்றது. அதுக்கப்பறம் படகு மாதிரி ஒரு கார்ல ஏறி கோயிலுக்குள் போனார்.

சந்நிதிகளில் பத்திரிகை

சந்நிதிகளில் பத்திரிகை

பூரண கும்ப மரியாதையுடன் கோயில் சார்பில் அம்பானியை வரவேற்றார்கள். பிறகு கோயிலுக்குள் ஒவ்வொரு முக்கிய சந்நிதிகளில் தனது மகளின் கல்யாண பத்திரிகையை வைத்து சாமி கும்பிட்டார்.

ரூ.55 ஆயிரம்

ரூ.55 ஆயிரம்

பிறகு கிளம்பி செல்லும்போது, ராமநாதசுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் மராமத்துப் பணிகளின் முழு செலவினையும் தாம் ஏற்றுக் கொள்வதாக அம்பானி கோயில் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார். அதோடு விடவில்லை, கோயிலுக்கு ரூ.55 ஆயிரம் காணிக்கையாக வழங்கினார்.

1 மணிநேரம்

1 மணிநேரம்

இதில் என்ன ஸ்பெஷல் என்றால், தினமும் பகல் 1 மணி ஆனா கோயிலின் நடை சாத்தப்படும். இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. ஆனால் முகேஷ் அம்பானிக்காக கூடுதலாக ஒரு மணி நேரம் நடை திறந்து வைக்கப்பட்டதாம்!! காசு பணம் இருந்தால் எல்லாமே மாறிடும் போல!!

English summary
Mukesh Ambani offers prayers at Rameswaram Temple
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X