ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை… கனிமொழி விளாசல்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: நாட்டின் காவல்காரன் என்று சொல்லும் மோடியின் ஆட்சியில் ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகி உள்ளதாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து, மூக்கையூர் சந்திப்பில் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

Over 21,000 farmers commit suicide every year in Modi regime: Kanimozhi campaign

அத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்!அத்வானி இடத்தில் அமித்ஷா.. முடிவுக்கு வந்த அரசியல் சகாப்தம்!

விளம்பரச் செலவுக்காக மக்களின் வரிப்பணத்தில் நான்காயிரம் கோடி செலவு செய்தார் பிரதமர் மோடி என்றும் ஆனால், மழை வெள்ளத்திற்கு நிவாரணம் வழங்கமாட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளின் மொத்த கடன் தொகையான 72 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்யாமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கடன் தொகையை பிரதமர் மோடி தள்ளுபடி செய்வதாக புகார் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக விமர்சித்தார். மத்திய அரசையும், மாநில அரசையும் இந்த தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கனிமொழி கேட்டுக் கொண்டார்.

English summary
Lok Sabha Elections 2019: Kanimozhi said that Over 21,000 farmers commit suicide every year in Modi regime
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X